தமிழக அரசின் மக்கள் நல திட்டம்
தமிழக அரசு சார்பாக மக்கள் நல திட்டங்கள் மட்டுமின்றி நிதி உதவி வழங்கும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் குழந்தைகள் பிறந்தது முதல் திருமணம் செய்து வைப்பது வரை தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக உதவித்திட்டங்களை நிறைவேற்றப்படுகிறது. குறிப்பாக பள்ளிகளில் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் இடை நிற்றலை குறைக்கும் வகையிலும் காலை மற்றும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன் காரணமாக ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமாக பள்ளிக்கு வருகை புரிகின்றனர். மேலும் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, புத்தகம் என பல திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது தனியார் பள்ளிகளுக்கு இணையாக இன்று அரசு பள்ளிகளும் உயர்ந்து வருகிறது.
பெண்களுக்கான உதவித்தொகை திட்டம்
இதே போல அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மட்டுமல்லாமல் மாணவர்களுக்கும் உயர்கல்வியில் படிக்கும் போது மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களின் அடிப்படை தேவைகளுக்கு உதவியாக உள்ளது. இதனை தொடர்ந்து திருமண உதவித்திட்டமும் தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறது. பட்டதாரி பெண்களுக்கு 50ஆயிரம் ரூபாயும் 8 கிராம் தங்கமும், படிக்காத பெண்களுக்கு 25ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
அடுத்ததாக குடும்பத்தலைவிகளுக்கு மாதம், மாதம் உதவித்தொகையாக மகளிர் உரிமைத்தொகை திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் மகளிர் யாருடைய உதவியும் இல்லாமல், யாருடைய எதிர்பார்ப்பும் இல்லாம் சுயமாக தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும், மாதம், மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 12ஆயிரம் ரூபாய் வரை குடும்பத்தலைவிகளால் சேமிக்க முடியும்,
கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம்
இதுமட்டுமில்லாமல் விடியல் திட்டத்தின் மூலம் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணத்தால் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் 2ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடிகிறது. மேலும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், கைம்பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படவுள்ளது. சுய தொழில் செய்து சுயமரியாதையுடன் வாழ்வதற்கு 1 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படுவதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஏழை பெண்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் தான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் பேறுகால நிதி உதவி தேவையாக முதலில் 6ஆயிரத்தில் இருந்து 12000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. தற்போது 18,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
pregnancy
கர்ப்பிணி பெண்களுக்கு 18ஆயிரம் உதவி தொகை
கர்ப்பம் அடைந்த பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வாங்குவதற்கு உதவியாக இருக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கர்ப்பம் தரித்த பெண்கள் தங்கள் பகுதியில் உள்ள கிராம மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் பரிசோதனை செய்து பிக்மி எண் பெற வேண்டும் இதனையடுத்து 2000 ரூபாய், 4ஆயிரம் ரூபாய் என தவனை முறையில் 18ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும்.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மாவு, இரும்பு சத்து டானிக், பேரிச்சம்பழம், புரத சத்து பிஸ்கட், ஆவின் நெய், பூச்சி மாத்திரை, துண்டு ஆகியவைகளை கொண்ட 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசு பெட்டகம் வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த பெண்களுக்கு மட்டுமே இந்த திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
தனியார் மருத்துவமனைக்கும் விரிவாக்கம்.?
எனவே இந்த திட்டத்தை தனியார் மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என தொடர் கோரிக்கை எழுந்தது. தனியார் மருத்துவமனையில் பிரசவிக்கும் பெண்களும் உயர் தர வகுப்பு சேர்ந்த பெண்கள் இல்லையெனவும் எனவே அவர்களுக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பொது சுகாதார இயக்குனரகம் இந்த திட்டத்திற்கு தனியார் மருத்துவமனை இணைக்கும் பணியே மேற்கொள்ள மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனை கொண்டுவர அந்த மருத்துவமனைகளுக்கு வசதி உள்ளதா எனவும் ஆய்வு செய்ய அறிவித்தப்பட்டுள்ள கூறப்படுகிறது. எனவே இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படுவது குறித்த தகவல்களை தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.