இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1, ஆகிய பணியிடங்களுக்கான அறிவிக்கை (எண்.02/2025) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் (Website: https://www.trb.tn.gov.in) வாயிலாக இன்று (10.07.2025) வெளியிடப்படுகிறது. அந்த வகையில் பாடவாரியான காலிப் பணியிட விவரங்கள்:
தமிழ் 216 இடங்களும், ஆங்கிலம் 197, கணிதம் 232, இயற்பியல் 233 இடங்களுக்கும், வேதியியல் 217, தாவரவியல் 147, விலங்கியல் 131, வணிகவியல் 198 இடங்களுக்கும், பொருளியல் 169, வரலாறு 68 புவியியல் 15, அரசியல் அறிவியல் 14, கணினி பயிற்றுநர் நிலை-1க்கு 57 இடங்களும், உடற்கல்வி இயகுகனர் நிலை 1க்கு 102 என ஒட்டுமொத்தமாக 1996 இடங்கள் நிரப்பப்படவுள்ளதாக அந்த அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.