குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை! எந்த தேதி தெரியுமா?

Published : Apr 29, 2025, 10:16 AM ISTUpdated : Apr 29, 2025, 10:51 AM IST

தமிழகத்தில் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுபான விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

PREV
15
குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை! எந்த தேதி தெரியுமா?
TASMAC Shop

TASMAC Shop Holiday: தமிழக அரசின் மதுவிலக்கு ஆயுத் தீர்வுதுறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை நடைபெற்று வருகிறது. அதுவும் பண்டிகை நாட்களான தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட நாட்களில் வருமானம் இரட்டிப்பாகும். அதேபோல் வார இறுதி நாட்களில் ரூ.150 முதல் ரூ.200 கோடிக்கு அளவுக்கு விற்பனையாகும். தமிழகத்தில் வருமானத்தை கொட்டி கொடுக்கும் துறையாக இந்த துறை இருந்து வருகிறது. 

25
TASMAC

2024-2025ம் நிதி ஆண்டில் டாஸ்மாக் வருவாய் உயர்வு

இதுதவிர தனியார் மதுபான பார்கள், நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் பார்கள், பப்புகள் என தனியாக உள்ளன. 2024-2025ம் நிதி ஆண்டில் மட்டும் டாஸ்மாக் மூலம் 48,344 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. அதன்படி 2023 - 2024 நிதியாண்டை விட 2,489 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. 

இதையும் படிங்க: திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பீர், கறி விருந்து பார்ட்டி.! வெளியான ஷாக் வீடியோ

35
TASMAC Shop Holiday list

 8 நாட்கள் மட்டுமே டாஸ்மாக் கடைகள் மூடப்படும்

இந்த மதுக்கடைகள் எல்லாம் ஆண்டுக்கு குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே விடுமுறை அளிக்கப்படுகிறது. அதாவது திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மிலாடு நபி, மகாவீர் ஜெயந்தி, தொழிலாளர் தினம், வள்ளலார் தினம் சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட 8 நாட்கள் மட்டுமே டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.
 

45
labour day

மே 1ம் தேதி டாஸ்மாக் கடை விடுமுறை

இந்நிலையில் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் தனித்தனியாக அறிவிப்பை வெளியிட்டு வருகிறனர். அதன்படி வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் உள்ள மதுபான கடைகள், அதையொட்டி பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பார்கள் அனைத்தும் உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதி மூடி வைக்க வேண்டும்.

இதையும் படிங்க: டாஸ்மாக் வழக்கு! தமிழக அரசு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்! செந்தில் பாலாஜிக்கு சிக்கலா?

55
Tasmac Holiday news

விடுமுறை தினத்தில் மதுபானம் விற்பனை செய்தால் நடவடிக்கை

அன்றை தினத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.  அதேபோல், அன்றைய தினத்தில் பார்களில் மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால் பார் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories