அண்ணாமலைக்கு எம்.பி. பதவி
அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினராக பதவி வழங்கப்பட்டது. இதற்கிடையே அண்ணாமலைக்கு எம்.பி. பதவி வழங்க இருப்பதாகவும், அவர் ஆந்திராவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆந்திராவில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் விஜய்சாய் ரெட்டி பதவியை ராஜினாமா செய்த நிலையில், அங்கு இருந்து அண்ணாமலை தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் உறுதிப்படுத்தின.
ஆந்திராவில் வாய்ப்பு மறுப்பு
அதே வேளையில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பாஜகவிற்கு ஒதுக்கக் கூடாது. தங்களது கட்சியை சேர்ந்தவர் தான் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சிக்கும், அண்ணாமலைக்கும் அதிர்ச்சி அளிக்கு விதமாக ஆந்திரா மாநிலங்களவை தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த வெங்கட சத்யநாராயணன் என்பவரை பாஜக தலைமை வேட்பாளராக அறிவித்துள்ளது.