Tasmac shop
அதிகரிக்கும் மது விற்பனை
மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த அளவிற்கு மதுபானக்கடைகளில் மது விற்பனை நடைபெறுகிறது. மது குடிப்பவர்களை பார்தாலே ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் காலங்கள் மாறி எங்கள் ஊரிலே மதுக்கடைகளை திறக்க வேண்டும் என கோரிக்கை வைக்கும் அளவிற்கு மதுபானம் சர்வ சாதாரணமாக மாறிவிட்டது.
மேலும் நவ நாகரீக வளர்ச்சி காரணமாக மேல் நாடுகளுக்கு இணையாக வளர்ச்சியும் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அலுவலக மீட்டிங்கில் கூட மதுபானம் தொடர்பான விருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
Tasmac shop
போட்டி போட்டு மது விற்பனை
மேலும் ஆண்களுக்கு இணையாக பெண்களும் மது குடிப்பதை ஸ்டைலாக கொண்டுள்ளனர். பல நள்ளிரவு நேர கேளிக்கை விருந்துகளில் இளம் பெண்களின் கைகளில் மதுகோப்பை சர்வ சாதாரணமாக காணப்படுகிறது. இந்த நிலையில் தான் மது விற்பனையின் மூலம் தமிழக அரசுக்கு பணமானது கொட்டோ கொட்டு என கொட்டுகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் வருகிற நிதி பெரிய அளவில் உதவியாக உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த கடைகளில் தினமும் 100 முதல் 120 கோடிக்கு மது விற்பனை நடைபெறுகிறது.
liquor shops
டிஜிட்டல் மயமாகும் டாஸ்மாக்
இதுவே புத்தாண்டு, பொங்கல், தீபாவளி பண்டிகையென்றால் ஒரே நாளில் 200 கோடி ரூபாய் அளவிற்கு மது விற்பனை நடைபெறுகிறது. எனவே பணத்தை அள்ளிக்கொடுக்கும் அட்ஷச பாத்திரமாகவே டாஸ்மாக் உள்ளது. ஒரு பக்கம் மது விலக்கு கொண்டு வரவேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுக்கும் நிலையில் மற்றொரு பக்கம் மது விற்பனையை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தான் டாஸ்மாக் கடைகள் தற்போது டிஜிட்டல் மயமாக மாறி வருகிறது. மதுபானக்கடைகளில் சரக்கு இருப்பு, மதுபானம் விற்பனை தொடர்பான தகவல்களை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள முடியும்.
liquor shops
கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை
மேலும் டாஸ்மாக் கடைகளில் கள்ளத்தனமாக காலை மற்றும் இரவு நேரத்தில், மது விற்பனை செய்வதையும் தடுக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. மேலும் மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கும் முறையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு பாட்டில்களுக்கு 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை டாஸ்மாக் ஊழியர்களால் வாங்கப்படுகிறது.
எனவே மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக பணம் வசூலிப்பதை தடுக்கவும் இந்த டிஜிட்டல் மயம் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது. தற்போது ஒரு சில மாவட்டங்களில் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முறை விரைவில் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
tasmac shop leave
டாஸ்மாக் விடுமுறை
புயலே வந்தாலும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதில்லை. ஆனால் வருடத்தில் இந்த 8 நாட்கள் மட்டும் கண்டிப்பாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. குறிப்பாக திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த ஜனவரி மாதம் திருவள்ளூர் தினம் ஜனவரி 15ஆம் தேதி புதன்கிழமை வருகிறது. இந்த தினத்தில் விடுமுறை விடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
TASMAC LEAVE
குடியரசு தினம் - டாஸ்மாக் விடுமுறை
இதே போல குடியரசு தினமும் இந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி ஜனவரி 26ஆம் தேதி சனிக்கிழமை டாஸ்மாக் கடைகளை மூடப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே உள்ள நிலையில், விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் அந்த அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பாக வெளியிடப்படும்