CHENNAI TOUR
சுற்றுலா செல்லும் பொதுமக்கள்
ஊர் ஊராக சுற்றுவது என்றால் பலருக்கும் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில் அமைதியான சூழலை தேடி, இயற்கையை தேடி அலைந்து திரிவதற்காகவே ஒரு கூட்டம் உள்ளது. இதே போல கடல்கள், அருவிகள் எனபல இடங்களை தேடி பயணம் செய்பவர்களும் உண்டு.
மேலும் கோயில்கள்,புரதான சின்னங்கள் கொண்ட சுற்றுலா தளங்களுக்கும் மக்கள் செல்ல விருப்பப்படுவார்கள். அந்த வகையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து பல நகரங்களுக்கும் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சுற்றுலா திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது.
TTDC TOUR
தமிழக அரசின் சுற்றுலா திட்டங்கள்
இதன் படி, திருச்செந்தூர்-ராமேஸ்வரம் வரையிலான மூன்று நாள் சுற்றுலா, ஜல்லிக்கட்டு போட்டியை காணும் வகையில் மதுரைக்கு மூன்று நாள் சுற்றுலா, தமிழக முழுவதும் கோயில்கள், மலைப்பகுதிகள் என பல இடங்களை சுற்றி வரும் வகையிலான 8 நாட்கள் சுற்றுலா, நான்கு நாட்கள் அறுபடை வீடு சுற்றுலா, மூன்று நாட்கள் நவகிரக சுற்றுலா,
14 நாட்கள் தென் தமிழக சுற்றுலா, ஒரு நாள் திருவண்ணாமலை கிரிவல சுற்றுலா, ஒரு நாள் வேலூரில் உள்ள தங்க கோயிலை சுற்றிப் பார்க்கும் வகையிலான சுற்றுலா, பாண்டிச்சேரியை சுற்றி பார்க்கும் வகையில் ஒரு நாள் சுற்றுலா, காஞ்சிபுரம் கோவில்களுக்கு சுற்றுலா என பல ஆன்மீக சுற்றுலா திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
mahabalipuram temple
1000 ரூபாய்க்கு டூர்
இந்த நிலையில் சென்னையில் இருந்து புறப்பட்டு வரும் வழியில் உள்ள இடங்களை பார்வையிட்ட பின்னர் மகாபலிபுரத்தை சுற்றிப்பார்க்கும் வகையில் சுற்றுலா திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இதன் படி 1000 ரூபாய்க்கு இந்த சுற்றுலா திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா திட்டத்தின் கீழ் சென்னையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும் சுற்றுலா வளர்ச்சிக்காக துறையின் பேருந்தானது இரவு 7 மணிக்கு மீண்டும் சென்னை திரும்ப வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
mahabalipuram
இத்தனை இடங்களை பார்க்கலாமா.?
அந்த வகையில் காலையில் முதலாவதாக மருந்தீஸ்வரர் கோயிலை சுற்றி பார்த்து பார்த்துவிட்டு இஸ்கான் கோயில், தக்சன் சித்ரா, முட்டுக்காடு போட்டிங் முதலைப்பண்ணை, புலிக்குகை ஆகிய இடங்களில் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மகாபலிபுரத்தில் உள்ள கடல் கோயில், அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம் ஆகிய இடங்களில் பார்வையிட்டு சுற்றி பார்க்கும் வகையில் இந்த சுற்றுலா திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த திட்டத்திற்கு நபர் ஒருவருடமிருந்து ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது