தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் உள்பட 20 இடங்களில் கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில், 1,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பது அமலாக்கத்துறை பரபரப்பு அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம், தமிழக அரசு ஆகியோர் சார்பில் மொத்தம் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.