மதுரை டூ விஜயவாடா புதிய விமானம்! வழி பெங்களூரு! டிக்கெட் இவ்வளவு கம்மியா?

Published : Mar 25, 2025, 10:50 AM ISTUpdated : Mar 25, 2025, 10:52 AM IST

மதுரையில் இருந்து பெங்களூரு வழியாக விஜயவாடாவுக்கு இண்டிகோ விமான சேவை தொடங்குகிறது. இந்த விமானத்தின் கட்டணம் என்ன? புறப்படும் நேரம் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

PREV
14
மதுரை டூ விஜயவாடா புதிய விமானம்! வழி பெங்களூரு! டிக்கெட் இவ்வளவு கம்மியா?

IndiGo Flight service Madurai to Vijayawada via Bengaluru: தமிழ்நாட்டில் சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நகரமாக விளங்கி வருவது மதுரை. கோயில் நகரம், தூங்கா நகரம் என்றழைக்கப்படும் மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட ஆன்மிக தலங்களும், சுற்றுலா தலங்களும் உள்ளன. இதனால் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் மதுரைக்கு வருகை புரிகின்ரனர். மதுரை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 
 

24
Madurai to Vijayawada Indigo Flight

இந்நிலையில், மதுரையில் இருந்து பெங்களூரு வழியாக விஜயவாடாவிற்கு இண்டிகோ விமான நிறுவனம் புதிய விமான சேவையை மார்ச் 30ம் தேதி முதல் தொடங்க உள்ளது. தற்போது, ​​மதுரையில் விஜயவாடாவிற்கு நேரடி விமானம் இல்லை. இதனால் விஜயவாடா செல்லும் பயணிகள் சென்னை அல்லது பெங்களூரு சென்று வேறு விமானத்தில் செல்ல வேண்டியதிருந்தது. ஆனால் பயணிகள் இனிமேல் இறங்கி வேறு விமானத்தை தேட வேண்டியதில்லை. 

புதிய இண்டிகோ விமான சேவையில் பயணிகள் பெங்களூருவில் அதே விமானத்தில் 30 நிமிடங்கள் தங்கி, அதன் பயணத்தைத் தொடரலாம். இந்த விமானம் மதுரையில் இருந்து தினமும் காலை 8.15 மணிக்குப் புறப்பட்டு, காலை 9.45 மணிக்கு பெங்களூருவை சென்றடையும். அங்கு சுமார் 30 நிமிடங்கள் விமனம் நிறுத்தப்பட்டு மீண்டும் காலை 10.15 மணிக்கு புறப்பட்டு காலை 11.55 மணிக்கு விஜயவாடா சென்றடையும்.

ஜம்மு வைஷ்ணவ தேவி கோயில் பக்தர்களுக்கு குட்நியூஸ்! இனி விமானத்தில் ஜாலியாக பறக்கலாம்!

34
Madurai to Vijayawada Flight via Bengaluru

மறுமார்க்கமாக இந்த விமானம் விஜயவாடாவில் இருந்து மாலை 5.40 மணிக்குப் புறப்பட்டு, இரவு 7:25 மணிக்கு பெங்களூருவை வந்தடையும். அங்கு 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு இரவு 7.55 மணிக்கு புறப்பட்டு இரவு 9.20 மணிக்கு மதுரையை வந்தடையும். மொத்த பயண நேரம் 3 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆகும். இந்த விமானத்துக்கான கட்டணம் ரூ.6,000ல் இருந்து தொடங்குகிறது. பயணம் செய்யும் நாட்களை பொறுத்து கட்டணம் மாறுபடும்.

இந்த விமானம் இயக்கப்படுவதன் மூலம் பயணிகள் இறங்கி மாற வேண்டிய தொல்லை இனி இல்லை. மேலும் மதுரை தனது உள்நாட்டு விமான இணைப்பை மேம்படுத்த உள்ளது. தடையற்ற பிராந்திய இணைப்புக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த மதுரை விஜயவாடா விமானம் இயக்கப்படும். மதுரை விமான நிலையத்தில் சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களுக்கு உள்நாட்டு விமானங்கள் உள்ளன. 

44
Madurai Airport

புதிய விமான சேவையை வரவேற்ற விமான நிலைய ஆர்வலரான எம். ராஜேஷ், இனிமேல் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையேயான பயணம் மிகவும் எளிதாக இருக்கும் என்றார். "இப்போது ஹைதராபாத் வழியாக தெலுங்கானா மற்றும் ஆந்திராவிற்கு மட்டுமே இணைப்பு உள்ளது. புதிய விமானம் வணிகம், சுற்றுலா மற்றும் புனித யாத்திரை பயணத்தை அதிகரிக்கும், மேலும் தெற்கு தமிழ்நாட்டின் முக்கிய போக்குவரத்து மையமாக மதுரையை நிலைநிறுத்தும்" என்று அவர் தெரிவித்தார்.

Hill Stations: இந்தியாவின் டாப் 10 மலைவாசஸ்தலங்கள்! சம்மரில் மிஸ் பண்ணாதீங்க!

Read more Photos on
click me!

Recommended Stories