சர்க்கரை அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்! அமைச்சர் போட்ட உத்தரவால் ரேஷன் கடையில் நடந்த அதிரடியை பாருங்க!

First Published | Jul 25, 2024, 1:10 PM IST

ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்குமே, பொருட்கள் முறையாக தங்குதடையின்றி வழங்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு அமைச்சர் சக்கரபாணி உத்தரவிடப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தினமும் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளன. மறுபுறம் புகார்களும், ரேஷன் அரசி கடத்தல் சம்பவமும் நடந்து வருகிறது. குறிப்பாக, தமிழக ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் ஒரே தவணையில் வழங்குமாறு ஊழியர்களுக்கு, உணவு துறை பலமுறை உத்தரவிட்டும் அதை, பல ஊழியர்கள் சரிவர பின்பற்றுவதில்லை என்ற புகார்களும் அவ்வப்போது வருகிறது. இதன் காரணமாக அனைத்து ரேஷன் கடைகளிலும் அதிரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவை பிறப்பித்தது.

Minister Sakkarapani

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ராஜம்பட்டி ஊராட்சி  அத்திமரத்துவலசு கிராமத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில்  உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து பங்கேற்றார். அப்போது பெண் ஒருவர் பொது விநியோக திட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படவில்லை என புகார் தெரிவித்தார். இதனையடுத்து சற்றும் யோசிக்காமல் அந்த பெண்ணை அழைத்து கொண்டு அத்திமரத்துவலசு ரேஷன் கடைக்கு நேரடியாக சென்றார்.

இதையும் படிங்க: ஆந்திராவில் காதலி வீட்டில் பதுங்கி இருந்த ரவுடி சீசிங் ராஜா! சேசிங் செய்த போது எஸ்கேப்! தப்பிக்க உதவிய போலீஸ்?

Tap to resize

ration shop

அந்த கடையில் வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவற்றின் இருப்பு அவற்றின் தரம் மற்றும் விநியோ பதிவேடு ஆகியவற்றை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டார். அந்த கடையில் ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதையும் அங்கிருந்த பொதுமக்கள் முன்னிலையிலேயே உறுதிப்படுத்தினார். தொடர்ந்து அமைச்சர் அங்கிருந்த பொதுமக்களிடம் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் குறித்து கேட்டறிந்தார். அத்துடன், பொதுமக்களுக்கு அனைத்து ரேஷன் கடையிலும் பொருட்கள் முறையாக வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் உத்தரவிட்டார். 

Latest Videos

click me!