மாணவர்களுக்கு மாதம் ரூ.1000.! யாருக்கெல்லாம் உதவித்தொகை கிடைக்கும், கிடைக்காது - தகுதி என்ன.?இதோ முழுவிவரம்

First Published Jul 25, 2024, 12:03 PM IST

அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது. அதில் யாருக்கெல்லாம் கிடைக்கும், யாருக்கெல்லாம் கிடைக்காது என விவரங்கள் இடம்பெற்றுள்ளது. 

மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய்

திமுக அரசு பதவியேற்றதையடுத்து மகளிர் உதவி தொகை, உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதையடுத்து மாணவர்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

போஸ்ட் ஆபிஸ் RD : மாதம் இந்த தொகையை முதலீடு செய்தால்.. ரூ.17 லட்சம் ரிட்டர்ன் கிடைக்கும்..

யாருக்கெல்லாம் 1000 ரூபாய் கிடைக்கும்

தமிழ் புதல்வன் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளில்  6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் முழுமையாக பயனடைவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் ஊக்கத் தொகை மாணவர்களின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்த பின்னரும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு மெசேஜ் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos


School Student

பெற்றோரின் வருமான உச்சவரம்பு

இந்த திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களின் பெற்றோரின் வருமான உச்ச வரம்பு இனம் மற்றும் ஒதுக்கீடு ஆகிய எந்தவொரு பாகுபாடும் இன்றி, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் உள்ள எவ்வித கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயிலும் மாணவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

students

அரசாங் அங்கீகரிக்கப்பட்ட படிப்பு

அரசுப் பள்ளிகளிலும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் 8 ஆம் வகுப்பு அல்லது 9 ஆம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு வரை பயின்று தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைய தகுதி உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயர்கல்வியில் படிக்கும்  மாணவர் பயிலும் நிறுவனம் மற்றும் பாடப்பிரிவு தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

Aadi Amavasai : ஆடி அமாவாசைக்கு ராமேஸ்வரத்திற்கு போகனுமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து தெரியுமா.?

Student

அஞ்சல் வழிக்கல்வி மாணவர்களுக்கு கிடைக்குமா.?

தொலைதூர / அஞ்சல் வழியிலும், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையை பெற இயலாது.

பிற மாநிலங்களில் மத்திய அரசின் கீழ் செயல்படும் IIT, NIT. IISER போன்ற தகைசால் கல்வி நிறுவனங்களில் பயிலும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவர்களும் இத்திட்டத்தில் பயன்பெறுவர். இவர்கள் மாநில திட்ட மேலாண்மை அலகின் மூலமாக அணுகலாம்.

விண்ணப்பிப்பது எப்படி.?

தமிழ்ப் புதல்வன்" திட்டத்திற்காக விண்ணப்பிக்கும் அனைவரும் ஊக்கத்தொகையைப் பெற இந்த திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக தகவல் முகமையினை (Portal) அவர்கள் உயர்கல்வியைத் தொடரும் கல்வி நிறுவனம் மூலமாக நேரடியாக விண்ணப்பிக்கலாம் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!