ஆந்திராவில் காதலி வீட்டில் பதுங்கி இருந்த ரவுடி சீசிங் ராஜா! சேசிங் செய்த போது எஸ்கேப்! தப்பிக்க உதவிய போலீஸ்?

First Published | Jul 25, 2024, 11:16 AM IST

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சீசிங் ராஜா ஆந்திராவில் 2வது மனைவி வீட்டில் பதுங்கியிருந்த அவருக்கு போலீஸ் வருவதை முன்கூட்டியே அறிந்து அங்கிருந்து தப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

Armstrong Murder

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ம் தேதி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பொன்னை பாலு, அருள், ராமு, திமுக நிர்வாகியின் மகன் சதீஷ், அதிமுக நிர்வாகி மலர்க்கொடி, தமாகாவை சேர்ந்த ஹரிஹரன், பாஜகவை சேர்ந்த அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.  இதில், திருவேங்கடம் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். கைதான ஹரிஹரன் கொடுத்த தகவலின் அடிப்படையில் வெங்கத்தூர் கூவம் ஆற்றில் வீசப்பட்ட செல்போன்களை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

police custody

இந்நிலையில், ஏற்கனவே போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்ட பொன்னை பாலு, அருள், ராமு ஆகியோரை மீண்டும் 3 நாளும், வழக்கறிஞர் ஹரிஹரனுக்கு மட்டும் 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிடப்பட்டது. அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர்களை போலீசார் தடயங்கள் சேகரிக்க அழைத்துச் சென்றனர்.

Tap to resize

Anjalai

இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் காதலி அஞ்சலை கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ரவுடி சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். 

Seizing Raja

அப்போது ஆந்திராவில் அவரது இரண்டாவது மனைவி வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு தனிப்படை போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்து அங்கிருந்து சீசிங் ராஜா காரில் தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. காரின் பதிவெண்ணை வைத்து  சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் மும்முரமாக தேடிவருகின்றனர். 

Seizing Raja escape

ஒருங்கிணைந்த குற்றப்பிரிவில் உள்ள காவல் அதிகாரி ஒருவர் சீசிங் ராஜாவுக்கு நண்பராக உள்ளதாகவும் அவர் தான் தனிப்படை போலீசார் அவரை தேடி வரும் தகவலை முன்கூட்டியே கசியவிட்டதாக கூறப்படுறது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட காவல் அதிகாரியின் செல்போன் தொடர்பு விவரங்களை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Latest Videos

click me!