12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்! இனி ஓடவும் முடியாது ஒளியும் முடியாது! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published : Nov 10, 2025, 12:48 PM IST

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிகளவில் பங்கேற்காமல் இருப்பதை தடுக்க, பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இனி வரும் காலங்களில் 75% வருகைப்பதிவு இல்லாத மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

PREV
14

மாணவர்களின் எதிர்காலத்துக்கும், உயர் கல்விக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்தேர்வாக 12ம் வகுப்பு தேர்வு உள்ளது. ஏனென்றால் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி செல்வதற்கு 12ம் வகுப்பு மதிப்பெண் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில் மருத்துவ படிப்பாக இருந்தாலும், பொறியியல் படிப்பாக இருந்தாலும், கலை அறிவியல் படிப்பாக இருந்தாலும் 12ம் வகுப்பு மதிப்பெண் முக்கியமானது. இந்த மதிப்பெண்ணை வைத்தே மாணவர்களின் எதிர்கால படிப்பு நிர்ணயம் செய்யப்படும்.

24

இந்நிலையில் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 12ம்பொதுத் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதி வருகிறார்கள். ஆனால் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளில் சிலர் இந்த தேர்வை எழுதாமல் இருப்பது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022-23-ம் கல்வியாண்டுக்கான 12ம் பொதுத் தேர்வை 8.51 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத விண்ணப்பத்திருந்த நிலையில் தமிழ் தேர்வை 50,674 பேர் எழுதாதது பள்ளிக்கல்வித்துறையை அதிர்ச்சி அடைய செய்தது. இதே நிலை தான் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

34

அதாவது இனி வரும் காலங்களில் 75% வருகைப்பதிவு இல்லாத மாணவர்கள், எவ்வித தன்னிச்சையான அனுமதியின் பேரிலும் தேர்வு எழுத முடியாது. இது, மாணவர்களிடையே பள்ளிக்கு வருவதன் அவசியத்தை உணர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகைப்பதிவை கண்காணித்து, அதன் அடிப்படையில் மட்டுமே தேர்வுக்கான அனுமதி வழங்கப்படும் என்பதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

44

இதன் மூலம் மாணவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து, கல்வியில் அதிக கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல் மாநிலத்தின் தேர்ச்சி விகிதம் மேம்படும் என்றும் கல்வித்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories