தமிழ்நாடு முதலமைச்சர் மு.ஸ்டாலின் பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடிட திராவிட மாடல் அரசு 2 கோடியே 22 இலட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வாழும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு ஆகியற்றுடன் ரொக்கம் ரூபாய் 3,000 சேர்த்து வழங்கும் பணிகளை சென்னை ஆலந்தூரில் நாளை காலை தொடங்கி வைக்கிறார்கள்.