Tamilnadu Government: தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ மூலம் மகளிர்க்கு இலவச அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார பயிற்சியை வழங்குகிறது.
ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் மகளிர்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்கள் சொந்தமாக முன்னேற வேண்டும், யாரையும் எதிர்பார்த்து இருக்க கூடாது என்பதற்காக ஒவ்வொரு திட்டங்களும் பார்த்து பார்த்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மகளிர் உரிமை தொகையான மாதம் 1000 ரூபாய் பெண்களுக்கு பெரிய அளவில் பயனாக உள்ளது.
25
தமிழக அரசு
மேலும் பெண்களுக்காக பிங்க் ஆட்டோ வாங்க ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. சொந்த தொழில் செய்ய மானிய கடன் உதவி திட்டங்களும் நடைமுறையில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் சொந்த தொழில் செய்ய விரும்புபவர்களுக்காக பேக்கரி தொழில் பயிற்சி, வீட்டு உபயோக பொருட்கள் பயிற்சி, யூடியூப் சேனல் தொடங்க பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வகையில் வேலைவாய்ப்புகான ஏற்பாட்டை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அழகு கலை நிபுணர் பயிற்சியானது இலவசமாகவே வழங்கப்படுவதாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
35
அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார பயிற்சி
இதுதொடர்பாக தமிழக அரசின் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்: சுயதொழில் செய்ய ஆர்வம் உள்ளவரா நீங்கள்? உங்களுக்கான வாய்ப்பாக அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார பயிற்சியில் சேருங்கள் என அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும்.
8 முதல் 12ம் வகுப்பு வரை படித்தவராக இருத்தல் வேண்டும்.
வயது : 18 முதல் 35
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம்
விண்ணப்பிக்க : www.tahdco.com
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
பயிற்சிக் காலம் 45 நாட்கள்
தங்கும் வசதி, உணவு உட்பட செலவினங்களை தாட்கோ ஏற்கும்.
55
ரூ. 20,000 வரை சம்பாதிக்கலாம்
மேலும் சென்னையில் தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு இந்திய NSDI (National Skill Development of India) அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் இளைஞர்களுக்கு தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய வேலை வாய்ப்பு வழங்கி ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ. 10,000 முதல் ரூ. 20,000 வரை பெறலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.