அதிகரிக்கப்போகுது வெப்பம்
இந்த நிலையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை முதல் 30ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 3° செல்சியஸ் உயரக்கூடும் என தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2- 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரித்துள்ளது.