கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது.
அதிகப்பட்சமாக லால்பேட்டை (கடலூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை) தலா 6 செ.மீ மழை பெய்துள்ளது. மணல்மேடு (மயிலாடுதுறை), சீர்காழி (மயிலாடுதுறை) தலா 5 செ.மீட்டரும், கே.எம்.கோயில் (கடலூர்), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), செருமுள்ளி (நீலகிரி), மயிலாடுதுறை AWS (மயிலாடுதுறை) தலா 4 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளன.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
21ம் தேதி முதல் 25ம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.