திமுக Vs தவெக..? கூட்டம் வருதுனா என்னவேணா பேசுவீங்களா..? விஜய்க்கு நயினார் கேள்வி

Published : Sep 21, 2025, 02:36 PM IST

கூட்டம் வருகிறது என்பதற்காக திமுக.வுக்கும் எங்களுக்கும் தான் போட்டி என்று விஜய் பேசுவது ஏற்புடையதல்ல என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

PREV
14
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

சேலம் மாவட்டம் நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சுமார் 1 மணி நேரம் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “இந்த சந்திப்பில் அரசியல் அதிகம் பேசவில்லை. மரியாதை நிமித்தமாக பார்த்துள்ளோம். அரசியலில் நிரந்தரமான நண்பனும் இல்லை.

24
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது

டெல்லியில் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி பேசியது தொடர்பாக ஆலோசிக்கவில்லை. அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக நாங்கள் பதில் சொல்ல முடியாது. அது அவர்களின் உட்கட்சி விவகாரம். மேலும் பாஜக எந்தவொரு கட்சியின் உட்கட்சி விவகாரத்திலும் தலையிடாது. 2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை.

34
டிடிவி தினகரனிடம் தான் கேட்க வேண்டும்

கூட்டணி தொடக்கத்தில் எடப்பாடி பழனிசாமிக்காக நான் வாக்கு கேட்பேன் என்று சொன்ன டிடிவி தினகரன் தற்போது கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளார். அவர் மீண்டும் கூட்டணிக்குள் வருவாரா இல்லையா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும்.

44
திமுக Vs தவெக..?

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என்று சொல்கிறார். கூட்டம் கூடுகிறது என்பதற்காக விஜய் ஜோசியம் சொல்வது போல் பேசக் கூடாது. திமுக.வைப் பொறுத்தவரை 4 ஆண்டு கால ஆட்சியில் எதையும் செய்யவில்லை. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் அதிகாரிகள் வீடுவீடாக சென்று கொண்டிருக்கின்றனர். இப்படி செல்வதால் மக்களுக்கு ஏதேனும் நல்லது நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories