தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள்.. இறுதி பட்டியல் வெளியீடு.. இத்தனை லட்சம் பேர் நீக்கமா?

Published : Feb 23, 2026, 03:06 PM IST

தமிழகத்தில் வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். எத்தனை லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்? புதிய வாக்காளர்கள் எத்தனை லட்சம் பேர்? என்பது குறித்து பார்க்கலாம்.

PREV
13
தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள்

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று (பிப்ரவரி 23) வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் S.I.R எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு பிறகு மொத்தம் 5,67,07,380 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2,77,38,925 ஆகும். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2,89,60,838 ஆகும். மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617 ஆகும். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

23
எத்தனை லட்சம் பேர் நீக்கம்?

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு பிறகு 27,54,793 பேர் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு முன்னதாக தமிழகத்தில் 6,41,41,587 வாக்காளர்கள் இருந்த நிலையில், இதற்கு பின்பாக 74,07,207  வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 

இறந்தவர்கள், இரட்டை பதிவு, வேறு இடத்துக்கு சென்றவர்கள் என்ற அடிப்படையில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

33
வாக்காளர்கள் அடையாள அட்டை எப்போது?

தமிழகத்தில் சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிகப்பட்சமாக 27,85,195 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1,16.896 வாக்காளர்கள் உள்ளனர். புதிய வாக்காளர்களுக்கு 15 நாட்களுக்குள் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு இருந்தால் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக மேல்முறையீடு செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories