கரூர் விவகாரத்தில் நான் குற்றவாளியா..? உங்களுக்கு மனசாட்சி இருக்கா..? முதல்வருக்கு விஜய் கேள்வி

Published : Feb 23, 2026, 01:33 PM IST

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனசாட்சி இருந்தால் கரூர் விவகாரத்தில் என் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்குமா? என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.

PREV
13
வழக்கமான தேர்தல் இல்லை

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று வேலூரில் பொதுமக்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “உங்கள் அனைவரையும் உங்கள் பகுதிக்கு நேரில் வந்து சந்திக்க வேண்டுமென்பதே என் விருப்பம். தேர்தலுக்கு பின்னர் ஒவ்வொரு கிராமம் கிராமமாக வந்து உங்களை நிச்சயம் சந்திப்பேன். வரக்கூடிய சட்டமன்ற தேர்தல் வழக்கமான தேர்தல் கிடையாது. ஒவ்வொரு 5 வருடத்திற்கும் ஒருமுறை வரக்கூடிய தேர்தல் கிடையாது. 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரக்கூடிய அதிசய தேர்தல் போன்றது.

23
விசில் சின்னத்திற்கே வாக்கு

பொதுவாக ஒவ்வொரு தேர்தலிலும் நீங்கள் வாக்களிப்பதுடன் உங்கள் கடமை நிறைவடைந்துவிடும். ஆனால் இந்த தேர்தலில் நீங்களும் பங்கெடுத்துள்ளீர்கள். உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவர் தான் தேர்தலில் நிற்பதாக அர்த்தம். நீங்கள் அனைவரும் உங்கள் வாக்கை விசில் சின்னத்திற்கு வழங்க வேண்டும்.

33
கள்ளாப்பெட்டி கூட்டணி

கரூர் விவகாரத்தில் ஏன் என் மீது பழியை தூக்கி போட்டீங்க..? உங்களுக்கு மனசாட்சினு ஒன்னு இருந்தா அப்படி பேசியிருப்பீங்களா? நாங்கள் நிகழ்ச்சி நடத்த ஏன் அனுமதி கொடுக்க மாட்டிங்கிறீங்க? அறிவாலயம் பக்கத்தில் யார் நிழலுக்காக ஒதுங்கினாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்கிறார்கள். கொள்ளையடிச்சு வச்சிருக்கின்ற பணத்தில் பங்கு கொடுக்கிறது. அதுக்கு பேரு “கள்ளாப்பெட்டி கூட்டணி”னு பெயர் வச்சிருக்கேன். கள்ளாப்பெட்டி கூட்டணியை ரொம்ப கஷ்டப்பட்டு சேர்த்திருக்கிறார்கள். பழைய கூட்டணி கணக்கெல்லாம் வச்சி ஜெயிக்க முடியாது.

இந்த தேர்தல் தமிழகத்திற்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் தான் போட்டி என்கிறார் முதல்வர் ஸ்டாலின். என்னைப் பொறுத்தவரை வரக்கூடிய தேர்தல் விஜய்க்கும், ஸ்டாலின் சாருக்கும் இடையே தான்.

Read more Photos on
click me!

Recommended Stories