இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு முக்கிய அமைப்புகள், அரசியல் தலைவர்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பான இடங்களுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மிரட்டல்கள் முதலமைச்சர் வீடு, எதிர்க்கட்சித் தலைவர் வீடு, டிஜிபி அலுவலகம், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அலுவலகங்கள், அரசு அதிகாரிகள், மனித உரிமை ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், பள்ளிகள், கல்லூரிகள், மத வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், தொலைக்காட்சி நிறுவனங்கள், சினிமா பிரபலங்களின் வீடுகள் என பரந்த அளவில் அதிகரித்து வருகின்றன.