7 மாவட்டங்களில் துவம்சம் பண்ணப்போகும் கனமழை.. பொங்கல் அன்று மழை பெய்யுமா? வானிலை அப்டேட்!

Published : Jan 11, 2026, 04:29 PM IST

தமிழகத்தை பொறுத்தவரை இன்று (ஜனவரி 11) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

PREV
14
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது

வடகிழக்கு இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடகிழக்கு இலங்கை கடலோரப்பகுதிகளில் முல்லைத்தீவிற்கு (இலங்கை) அருகில் 1530-1630 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடந்தது. இது மேலும் வலுவிழந்து தெற்கு கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது.

24
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

பின்பு இது மேலும் வலுவிழந்து தெற்கு கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை இன்று (ஜனவரி 11) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

7 மாவட்டங்களில் கனமழை

நாளை (ஜனவரி 12) கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

 13ம் தேதி (நாளை மறுநாள்) தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

34
பொங்கலுக்கு மழை இருக்குமா?

இதேபோல் பொங்கலுக்கு முந்தைய நாள் 14ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே வேளையில் பொங்கல் அன்று (ஜனவரி 15) முதல் 17ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

44
சென்னையில் எப்படி?

சென்னையை பொறுத்தவரை இன்றும், நாளையும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 25 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

 சென்னையில் இன்று ஊட்டி, கொடைக்கானலை போன்று வரலாறு காணாத குளிர் நிலவியது. இந்த குளிர் தொடருமா? என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் ஏதும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories