தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் மத்திய பாஜக அரசு தேசிய கல்விக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு வழிகள் வாயிலாக இந்தி மொழியை தமிழ்நாட்டில் திணிக்க முயல்வதாக குற்றம்சாட்டி வருகிறது.
இந்தி எதிர்ப்பை முன்வைத்து தமிழகத்தில் ஆட்சியை பிடித்த திமுக இந்தி எதிர்ப்பை தொடர்ந்து விடாமல் பிடித்து வருகிறது. முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முதற்கொண்டு திமுகவின் அனைத்து தலைவர்களும் இந்தி திணிப்பு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.
எப்படி கவனிக்காமல் விட்டனர்?
மத்திய அரசு இந்தியை திணிப்பதாக கூறி திமுகவினர் சிலர் பாளையங்கோட்டை ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் இந்தி எழுத்துகளை அழித்தது சர்ச்சையானது.
இப்படியாக திமுக அரசும், திமுகவினரும் இந்திக்கு எதிராக நிற்க, அரசு பேருந்தில் இந்தி எழுத்து தோன்றியதை எப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும்? சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர், போக்குவரத்து அதிகாரிகள் இதை எப்படி கவனிக்காமல் விட்டனர்? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.