1.50 லட்சம் ஆசிரியர்கள் வேலைக்கு ஆப்பு வைத்த சுப்ரீம் கோர்ட்! குட்நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்!

Published : Sep 02, 2025, 01:26 PM IST

தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பணியில் நீடிக்க, பணி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஓய்வு பெற 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

PREV
14

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பணியில் நீடிக்க, பணி உயர்வு பெறுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test- TET) கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதில் ஓய்வு பெற 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஓய்வு பெற 5 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம்.

24

தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் இருந்து வெளியேற வேண்டும். அவர்கள் ஓய்வுபெற்றதாக கருதப்பட்டு, அவர்களுக்கான ஓய்வுகாலப் பயன்கள் அளிக்கப்பட வேண்டும். ஆசிரியராக பணியில் சேர விரும்புவோரும், ஆசிரியர் பணியில் உயர்வை விரும்புவோரும் இந்த தேர்வில் தகுதி பெற வேண்டும். இல்லையென்றால் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற உரிமை இல்லை.

34

மேலும் அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு பொருந்துமா? என்பதை அரசியல் சாசன அமர்வு விசாரிக்க பரிந்துரைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் 1.50 லட்சம் பேருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

44

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் TET எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என நீதிமன்ற தெரிவித்துள்ளது. எக்காரணம் கொண்டும் தமிழக அரசு ஆசிரியர்களை கைவிடாது. யாரும் கவலைப்பட வேண்டாம். உச்சநீதிமன்ற தீர்ப்பு முழுமையாக வந்தவுடன் அதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும். உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஆசிரியர் சங்கங்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories