இசைஞானிக்கு சென்னையில் பாராட்டு விழா.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த முதலமைச்சர் ஸ்டாலின்

இசைஞானி இளையராஜா லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். ஜூன் 2ம் தேதி இளையராஜாவின் பிறந்தநாளில் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Tamil Nadu Government to Honor Ilaiyaraaja on June 2 2025 KAK

Appreciation ceremony for Ilayaraja - Chief Minister Stalin's announcement! 1976ம் ஆண்டு வெளியான "அன்னக்கிளி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கினார் இளையராஜா. இசைஞானி இளையராஜாவின் பாடல்களில் மயங்காதவர்களே இருக்கமாட்டார்கள். பல ஆயிரம் பாடல்களுக்கு சொந்தக்காரரான இசைஞானி இளையராஜா லண்டனில் ராயல் பிலார்மோனிக் என்ற இசைக்குழுவுடன் இணைந்து தனது வேலியண்ட் என்ற சிம்பொனியை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக அரங்கேற்றம் செய்தார்.  இந்த இசை நிகழ்ச்சியின் மூலம் சிம்பொனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றிய முதல் இந்தியர் எனப் பெருமையை இளையராஜா பெற்று இருந்தார்.

Tamil Nadu Government to Honor Ilaiyaraaja on June 2 2025 KAK

லண்டனில் இளையராஜாவின் சிம்பொனி

முன்னதாக இளையராஜாவின் சிம்பொனி இசை அரங்கேற்றத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இதே போல பல அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் வாழ்த்துகளை கூறியிருந்தனர். பிரதமர் மோடியும் இளையராஜாவை நேரில் அழைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். இதனையடுத்து இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பாக பாராட்டு விழா நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 


தமிழக அரசு பாராட்டு விழா

இந்த சூழ்நிலையில் தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது  லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்திய இளையராஜா தமிழ்நாட்டிலும் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்  சிந்தனைச் செல்வன் பேசிய நிலையில் இதற்கு பதில் அளித்து பேசிய  முதலமைச்சர் ஸ்டாலின்,  

ஜுன் 2ம் தேதி இசைஞானி இளையராஜா பிறந்தநாள். திரை உலகத்திற்கு வந்து 50 ஆண்டு காலம் நிறைவடைகிறது. இசையமைப்பாளர் இளையராஜாவை நான் நேரில் சந்தித்தபோது லண்டனின் நிகழ்த்திய சிம்போனி நிகழ்ச்சியை சென்னையில் நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தேன். 

Music Director Ilayaraja

ஜூன் 2ஆம் தேதி பாராட்டு விழா

இதற்கு லண்டனில் இருந்து 400 இசைக் கலைஞர்களை சென்னைக்கு அழைத்து வரவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.  அந்த வகையில் வரும் ஜூன் இரண்டாம் தேதி அவருடைய பிறந்தநாள் அன்று சென்னையில் அவருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். 

Latest Videos

vuukle one pixel image
click me!