ஏப்ரல் மாதத்தில் கொத்து கொத்தாக விடுமுறை! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் பள்ளி மாணவர்கள்!

Apirl Month School Holidays: பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர், ஜனவரியில் அதிக விடுமுறை கிடைத்தது. ஏப்ரல் மாதத்தில் அரசு மற்றும் வார விடுமுறை எத்தனை நாட்கள் என்பதை பார்ப்போம்.

Apirl Month School Holidays List tvk
பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே அளவில்லாத குஷிதான். பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பொருந்தும். அதிலும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். அந்த வகையில் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் போதும் போதும் என்ற அளவுக்கு விடுமுறை கொட்டி கிடந்தது. அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் ஒரு பக்கம் வடகிழக்கு பருவமழையால் விடுமுறை கிடைத்தால் மறு பக்கம் அரையாண்டு தேர்வு முடிந்து 10 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது. 

Apirl Month School Holidays List tvk
ஜனவரி மாதத்தில் கொட்டிக்கிடந்த விடுமுறை

இதனையடுத்து ஜனவரி 2ம் தேதி பள்ளி தொடங்கி ஒரு வாரம் தான் வகுப்புகள் நடைபெற்ற நிலையில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் பொங்கல் பண்டிகைக்கு 7 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்ததால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். வார விடுமுறை கழித்துவிட்டு பார்த்தால் மொத்தமாக ஜனவரி மாதத்தில் 10 நாட்கள் மட்டுமே பள்ளிகள் நடந்திருக்கும். 

இதையும் படிங்க: இது மாதிரி திரும்பவும் நடந்தா அவ்வளவு தான்! ஆசிரியர்களுக்கு பறந்த கல்வித்துறையின் எச்சரிக்கை!


மார்ச் மாதம் விடுமுறை

அதேபோல் பிப்ரவரி மாதம் வந்துவிட்டால் விடுமுறையே கிடைக்காத மாதம் என கூறப்படும். அந்த வகையில் பிப்ரவரி 11ம் தேதி தைப்பூசம் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்கள் மட்டுமே வந்தது. மார்ச் மாதத்தில் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தெலுங்கு வருட பிறப்பும், மார்ச் 31ம் தேதி திங்கள் கிழமை ரம்ஜான் பண்டிகையும் வருகிறது. அதில் ஒரு அரசு விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வந்துவிடுகிறது. வார விடுமுறையை சேர்த்து பார்த்தால் மொத்தம் மார்ச் மாதத்தில் 10 நாட்கள் விடுமுறை கிடைத்தது. 

ஏப்ரல் மாதம் விடுமுறை

இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் அரசு விடுமுறை மற்றும் வார விடுமுறை எத்தனை நாட்கள் என்பதை பார்ப்போம். அதன்படி ஏப்ரல் மாதம் தொடக்கத்தின் முதல் நாளே விடுமுறை வருகிறது.  ஏப்ரல் 1 திங்கள் கிழமை வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு, ஏப்ரல் 10 வியாழக்கிழமை மகாவீரர் ஜெயந்தி, ஏப்ரல் 14 திங்கள் கிழமை தமிழ் புத்தாண்டு/ அம்பேத்கர் பிறந்த நாள், ஏப்ரல் 18 வெள்ளிக்கிழமை புனித வெள்ளி ஆகிய நாட்கள் அரசு விடுமுறை வந்துவிடுகிறது. மற்றப்படி சனி, ஞாயிறு வார விடுமுறை வந்துவிடுகிறது. 

இதையும் படிங்க:  என்னை திருமணம் செய்து விட்டு அவளுடன் ஹனிமூன் போயிட்டு வரியாடா! பெண்ணால் கோவை ஏர்போர்ட்டில் பரபரப்பு!

கோடை விடுமுறை

பின்னர் ஆண்டு தேர்வு நிறைவு பெற்று 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்ரல் 22ம் தேதியும், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25ம் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை தொடங்குகிறது.

Latest Videos

vuukle one pixel image
click me!