ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த அறிவிப்பு.! வெளியான குட் நியூஸ்

First Published | Nov 14, 2024, 8:10 AM IST

மாணவர்களின் வாழ்க்கைக்கு முக்கிய படிக்கல்லாக இருக்கும் ஆசிரியர்கள், அந்த வகையில் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்த ஆசிரியர்களுக்கு  முக்கிய அறிவிப்பை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது

college student

கல்விக்கு முக்கியத்துவம்

கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாளைய தலைமுறையினரை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதற்காக ஆரம்பி கல்வி முதல் உயர்கல்வி வரை பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பாடு படும் ஆசிரியர்களையும் கவுரவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களது சொந்த மாவட்டங்களை விட்டு வெளி மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், விஷேச நாட்களுக்கு மட்டும் சொந்த ஊர் செல்லும் நிலை உள்ளது. அதுவும் பல நூறு கிலோ மீட்டர் தூரத்தில் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் ஆசிரியர்களின் நிலை திண்டாட்டம் தான்.
 

teacher

வெளியூரில் பணி- ஆசிரியர்கள் தவிப்பு

எனவே தங்களுக்கு சொந்த மாவட்டத்தில், சொந்த ஊரில் பணி கிடைக்காதா என ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஏங்கி காத்துள்ளனர்.  அந்தவகையல் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு இடமாறும் கலந்தாய்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் வட்டாரம், மாவட்டம் அளவில் தங்களுக்கு விருப்பமான இடங்களுக்கு ஆன்லைன் வழியாக நடத்தப்படும் கலந்து கொண்டு பயன் பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் இதே போல அரசு கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டது

Tap to resize

teacher

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி

அந்த வகையில் உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் 13 பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் வரும் அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு  கலந்தாய்வு நடத்து வது தொடர்பாக தமிழக அரசின் உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி, அரசு கலை. அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின்கீழ் இயங்கி வரும் அரசு பொறியியற் கல்லூரிகள், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசினர் சிறப்புப் பயிலகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களிடமிருந்து பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வு நடத்த கோரிக்கை வந்துள்ளது. 

college teacher

இணையவழியில் கலந்தாய்வு

இந்த கோரிக்கையின் அடிப்படையில், ஆசிரியர்களுக்குப் பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வினை வெளிப்படைத் தன்மையுடன் இணைய வழியின் வாயிலாக மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2024-25-ஆம் கல்வி ஆண்டிற்கான பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வினை (counseling) உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி 25.11.2024-க்குள்ளாக வெளிப்படைத் தன்மையுடன் இணையவழியின் வாயிலாக மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.  

இணையவழியாகப் பெறப்படுகின்ற ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் உரிய விதிகளின்படி பரிசீலனை செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து பணியிடமாறுதலுக்காக வெளியான அறிவிப்பையடுத்து உயர்கல்வித்துறை ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துள்ளது. இந்தநிலையில் உயர்கல்வித்துறை கலந்தாய்விற்கான பணியை தீவிரப்படுத்தியுள்ளது. 

Latest Videos

click me!