தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
மேலும் தனியார் துறையில் வேலை வாய்ப்பும் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை சார்பாக வேலைவாய்ப்பு முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஓசூரில் அமையவுள்ள பிரபல தொழிற்சாலையான டாடா நிறுவனம் சார்பாக பணியாளர் தேர்வு நடத்தப்பட்டது.
செப்டம்பர் மாதத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் நேர்காணல் நடைபெற்றது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதே போல மருத்துவ துறையில் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பும் விடுக்கப்பட்டது அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் மருத்துவ பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடத்தப்பட்டது.