சென்னையில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 1193 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த முகாமில், இதுவரை 2.31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.
2.31 லட்சம் பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் தகவல்
ஆண்டு தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடி பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர். அந்த வகையில் தமிழக அரசு சார்பாக அரசு துறையில் வேலை வழங்குவதோடு. தனியார் துறையோடு இணைந்து வேலைவாய்ப்பும் வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் ஆயிரக்கணக்கானோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
25
பிரபல தனியார் நிறுவனங்கள்
ZEBRONICS, TATA, BOSCH, MERIDIAN HOSPITAL, TVS SUNDARAM AUTO COMPONENTS LTD, ROYAL ENFIELD, KUN AUTO COMPANY PVT LTD உள்ளிட்ட 201 தனியார் துறை வேலையளிக்கும் நிறுவனங்களும் திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டனர். இதில் 11 மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 1193 (ஆண்கள்-683. பெண்கள்-510.) வேலைநாடுநர்கள் பணிநியமனம் பெற்றனர். இம்முகாமில் முதற்கட்ட நேர்முகத்தேர்வில் 655 (ஆண்கள்-347, பெண்கள்-308) நபர்கள் தேர்ச்சிபெற்று இரண்டாம் கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர்.
35
பணி நியமன ஆணை
திறன் பயிற்சிக்காக 88 வேலைநாடுநர்களும், அயல் நாட்டு வேலைவாய்ப்பிற்காக 64 வேலைநாடுநர்களும் பதிவு செய்தனர். இம்முகாமில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் பேசியபோது. கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவின் துவக்க நாளான 22.07.2023 அன்று சென்னை மாநில கல்லுரியில் நடைபெற்ற சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரமாவது நபருக்கு பணிநியமன ஆணையை துணை முதலமைச்சர் வழங்கினார் என தெரிவித்தார்.
45
இளைஞர்களுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை
டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை இராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற 100-வது தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் இரண்டு இலட்சமாவது நபருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன் என கூறினார். திமுக அரசு பதவியேற்றது முதல் நாளது தேதி வரை 177 பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும் 1,675 சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும்,
55
2.31 லட்சம் பேருக்கு வேலை
டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 100 சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு 3,777 மாற்றுத்திறனாளிகள் உட்பட 2,31,965 நபர்களுக்கு தனியார்துறை நிறுவனங்களில் பணிநியமனகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இத்தகைய வேலைவாய்ப்பு முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதால், தனியார் துறையில் பணிநியமனம் பெற விரும்பும் இளைஞர்கள் இம்முகாம்களை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்.