பிப்ரவரி 11ம் தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விதிமீறி மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! பிப்ரவரி 11ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!
தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. நாளுக்கு நாள் மது விற்பனை அதிகரித்து வருகிறது. சரமாரியாக நாள் ஒன்றுக்கு 100 முதல் 120 கோடி ரூபாய் வரை மதுபானம் விற்பனையும், வார இறுதி நாட்களின் ரூ.150 கோடி அளவுக்கும் விற்பனையாகிறது. அதுவும் பண்டிகை நாட்களில் வந்துவிட்டால் வருமானம் இரட்டிப்பாகும். குறிப்பாக வருமானத்தை அள்ளிக்கொடுக்கும் துறையாகவும் விளங்குகிறது.
24
டாஸ்மாக் கடைகள்
கடந்த பொங்கல் திருநாளுக்கு மட்டும் ரூ.725 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகின. இது கடந்த ஆண்டு விற்பனையை விட ரூ.47 கோடி அதிகம் என கூறப்படுகிறது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு அரசு விடுமுறைகள் கிடைத்தாலும் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 9 நாட்கள் மட்டுமே விடுமுறை. அதாவது காந்தி ஜெயந்தி, குடியரசு தின விழா, மிலாது நபி, திருவள்ளூவர் தினம், வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட 9 நாட்களுக்கு மட்டுமே விடுமுறை கிடைக்கும். இந்நிலையில் பிப்ரவரி 11-ம் தேதி சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
34
வள்ளலார் நினைவு தினம்
அதாவது வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003. விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 2511(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள். FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள். FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A).
44
மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
FL3(AA) மற்றும் FL11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு பிப்ரவரி 11ம் தேதி செவ்வாய்கிழமை அன்று வள்ளலார் நினைவு தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விடுமுறையானது சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பொருந்தும். அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர்.