மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வெளியான அடுத்த சூப்பர் அறிவிப்பு.! என்னனு கேட்டா அசந்து போய்டுவீங்க

Published : Feb 07, 2025, 06:41 PM IST

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு டிரோன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. டிரோன் இயக்குவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு, டிரோன்களும் வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகள் டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் சேவையைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
15
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வெளியான அடுத்த சூப்பர் அறிவிப்பு.! என்னனு கேட்டா அசந்து போய்டுவீங்க
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வெளியான அடுத்த சூப்பர் அறிவிப்பு

 மகளிர் முன்னேற்றத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்கள் சுய தொழில் செய்து முன்னேறும் வகையில் மானிய உதவி, கடன் உதவி உள்ளிட்டவைகள் செயல்படுத்தப்படுகிறது. மேலும் மகளிர் சுய உதவி குழுவிற்கு சுழல் நிதியும் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மகளிர் முன்னேற்றத்திற்காக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு டிரோன் வழங்கும் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கு டிரோன் இயக்க பயிற்சி அளித்து விவசாய நிலத்தில் பூச்சி மருந்துகள் அடிக்க வழிவகை செய்யப்படுகிறது. 

25
மகளிர் சுய உதவிக் குழு

அந்த வகையில்  2023-24 முதல் 2025-26 வரையிலான 3 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 15,000 ட்ரோன்களை இத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் தொடர்பாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்படும் விவசாயத்தில் பெரும்பாலான பணிகளை பெண்களே செய்து வருகின்றனர். எனவே. பல்வேறு பண்ணை சார்ந்த பணிகளில் நவீன தொழில் நுட்பங்களை மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் மூலம் செயல்படுத்தி, அதன் வாயிலாக அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

35
ஆளில்லா பறக்கும் வாகனம் மூலம் பயிர் பாதுகாப்பு

அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழ்நாடு அரசானது, ஒன்றிய அரசின் பங்களிப்புடன் ஆளில்லா பறக்கும் வாகனம் (Drone) மூலம் பயிர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும் தொழில் நுட்பத்தினை சுய உதவிக் குழு மகளிரிடையே அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது கிராமப்புறங்களில் வேலையாட்கள் கிடைப்பது குறைந்து வரும் நிலையில்,

டிரோன் மூலம் குறைந்த நேரத்தில் அதிகமான பரப்பளவில் மருந்து தெளிக்க முடியும். டிரோன் தொழில்நுட்பத்தினை சுய உதவிக் குழு மகளிருக்கு கற்றுத் தந்து, அதன் மூலம் அவர்களின் வருமானத்தை உயர்த்துவதற்காக, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு டிரோன் வழங்கும் திட்டம் ஒன்றிய அரசின் பங்களிப்புடன் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது.

45
டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் சேவை

 சுய உதவிக் குழுக்களில் இருந்து முதற்கட்டமாக 28 மாவட்டங்களைச் சேர்ந்த 44 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு. அவர்களுக்கு டிரோன் இயக்குவது குறித்த பயிற்சி அளித்து, டிரோன் இயக்குவதற்கான உரிமத்துடன் டிரோன்களும் வழங்கப்பட்டுள்ளன. பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், டிரோன் இயக்கும் பயிற்சி பெற்ற சுய உதவிக் குழு மகளிரைத் தொடர்பு கொண்டு, தங்களின் பயிர்களைப் பாதுகாக்க டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் சேவையைப் பெறலாம்.

55
உழவர் கைபேசி செயலி- டிரோன் வாடகை விவரம்

தமிழ்நாட்டில் டிரோன் இயக்குவதற்கான பயிற்சி பெற்ற சுய உதவிக் குழு மகளிர் தொடர்பான விபரங்கள் உழவர் கைபேசி செயலியில் தனியார் இயந்திர உரிமையாளர்கள் எனும் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் மாவட்டத்தில் உள்ள டிரோன் இயக்குவதற்கான பயிற்சி பெற்றுள்ள மகளிர் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம். விவசாயம் மேற்கொள்ளும் சுய உதவிக் குழு பெண் விவசாயிகள் மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளவர்களாக டிரோன் இயக்கும் பயிற்சி பெற்ற சுய உதவிக் குழு மகளிர் உள்ளனர் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Read more Photos on
click me!

Recommended Stories