ரேஷன் அட்டை தாரர்களுக்கு குட் நியூஸ்.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

First Published | Oct 17, 2024, 7:21 AM IST

தமிழகத்தில் மானிய விலையில் உணவு பொருட்கள் ரேஷன்கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி ரேஷன்கடைகளில் உணவு பொருட்கள் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

RATION CARD

மானிய விலையில் உணவு பொருட்கள்

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மானிய விலையில் மானிய விலையில் அரிசி, கோதுமை, சக்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. இதனை  2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரத்து 119 மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள சுமார் 7 கோடியே 2 லட்சம் பயணாளிகள் உணவுப்பொருட்கள் வாங்குகின்றனர்.

அந்த வகையில் கடந்த சில மாதங்களாக சரிவர  பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கிடைக்கவில்லையென புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு சார்பாக துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு புதிய டெண்டர் கோரப்பட்டு ரேஷன் கடையில் தங்கு தடையின்றி துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கப்படுகிறது.

ration shop

பருப்பு, பாமாயில் பற்றாக்குறை

இந்த நிலையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளிக்கு முன்பாக துவரம் பருப்பு வழங்கப்படாதது ஏழை மக்களை கடுமையாக பாதிக்கக் கூடியது என தெரிவித்துள்ளார்.  20,000 டன் துவரம் பருப்பு ஆர்டர் செய்யப்பட்டபோதிலும், மிக குறைவான அளவு துவரம் பருப்பு ரேஷன்கடைகளில் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். அரசின் அலட்சியம் காரணமாக மீதமுள்ள 16,527 டன் துவரம் பருப்பின் விநியோகம் சிக்கலான நிலையில் இருப்பதாகவும், இதனால் 1 கோடியே 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் துவரம் பருப்பு கிடைக்காமல் போவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Tap to resize

ration shop

அமைச்சர் பதில் அறிக்கை

எனவே,  போர்க்கால அடிப்படையில் துவரம்பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்து, தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

பருப்பும், பாமாயிலும் தீபாவளிக்குத் தங்கு தடையின்றி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார் மேலும் துவரம் பருப்பு விநியோகம் தொடர்பாக ஒரு நாளிதழில் வந்த தவறான செய்திக்கு ஏற்கனவே துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தீபாவளிக்குத் தட்டுப்பாடின்றி வழங்கப்படும் என்று 14/10/24 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ration shop

தட்டுப்பாடின்றி உணவு பொருட்கள்

இந்த நிலையில் கோயம்புத்தூர் தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அவர்கள் என்னுடைய அறிக்கையைப் படிக்காமல் பருப்பு விநியோகம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார்கள். அவரின் பார்வைக்கு என்னுடைய அறிக்கையை அனுப்பி வைத்துள்ளதாக கூறியுள்ளார். எனவே அக்டோபர் மாதத் துவரம் பருப்பு ஒதுக்கீடான 20ஆயிரத்து 751 மெட்ரிக் டன்னில் நேற்று முன் தினம் (15.10.2024) வரை 9ஆயிரத்து 461 மெட்ரிக் டன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார்.

2 கோடியே 4லட்சத்து 8ஆயிரம்  பாமாயில் பாக்கெட்கள் ஒதுக்கீட்டில் 97 லட்சத்து 83ஆயிரம் பாக்கெட்கள் விநியோகப்பட்டுவிட்டன. மீதி விரைவாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஆதலால் தீபாவளிக்கு எவ்விதத் தட்டுப்பாடுமின்றி துவரம் பருப்பும், பாமாயிலும் வழங்கப்பட்டு வருகின்றன என்பதை மீண்டும் வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 

Latest Videos

click me!