ரேஷன் கார்டில் ஒரே நிமிடத்தில் பெயர் நீக்கம், சேர்க்க சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

First Published | Oct 16, 2024, 7:30 AM IST

தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் கேட்டு பல லட்சம் பேர் காத்திக்கும் நிலையில், விண்ணப்பத்தின் நிலை தொடர்பாகவும், ரேஷன் கார்டு பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம்கள் அக்டோபர் 19ம் தேதி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

ரேஷன் கார்டு- தமிழக அரசின் சலுகைகள்

தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் 2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரத்து 119 மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளன. இதன் மூலம் 7 கோடியே 2 லட்சம் பயணாளிகள் உணவுப்பொருட்கள் வாங்குகின்றனர். குறிப்பாக இலவசமாகவும், மானிய விலையிலும் அரிசி, கோதுமை, சக்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது.

இது மட்டுமில்லாமல் அரசின் சலுகைகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது. மேலும் மழை வெள்ள பாதிப்பு, பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கும் ரேஷன் அட்டை இருந்தால் மட்டுமே உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் நிலை

இது மட்டுமில்லாமல் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழக அரசின் மகளிர் உரிமை தொகையை பெறுவதற்கும் ரேஷன் அட்டை முக்கிய ஆவணமாக உள்ளது. எனவே ரேஷன் அட்டை பெற மக்கள் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். கடந்த ஓராண்டில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ரேஷன் கார்டிற்காக விண்ணப்பம் செய்திருந்தனர்.

இதில் தற்போது முதல் கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களின் மனுக்கள் மீது ஆய்வு செய்யப்பட்டு விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் அட்டையில் உள்ள பெயர்களை நீக்கவும், புதிய பெயர்களை நீக்கவும் உணவு பொருட்கள் வழங்கல் அலுவலக்த்திற்கு சென்றால் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

Latest Videos


smart card

பெயர் சேர்க்க, நீக்க சூப்பர் சான்ஸ்

மேலும் ஆன்லைன் மூலம் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதலில் மோசடி நடப்பதால் அதனையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ரேஷன் அட்டையில் உடனடியாக பெயர் சேர்க்க மற்றும் நீக்கம் செய்ய தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.இந்த சிறப்பு முகாமில் அனைத்து அதிகாரிகளும் இருப்பார்கள். எனவே ரேஷன் கார்டில் பெயர் சேர்க்கவும் நீக்கவும் ஒரு சில நிமிடங்களில் பணியை முடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த சிறப்பு முகாமில் கலந்து கொள்பவர்கள் உரிய ஆவணங்களோடு சென்றால் உடனடியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் . இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்ப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம் அறிவித்த தமிழக அரசு

பொது விநியோகத் திட்டத்தின் மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் வருகிற 19.10.2024 அன்று 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த முகாம்களில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மற்றும் கைபேசி எண்பதிவு /மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் நியாய விலை கடைகளில் பொருள் பெற இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகார சான்று வழங்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!