TASMAC Shop: நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறையா? அரசு சொல்வது என்ன?

First Published Oct 15, 2024, 8:48 PM IST

TASMAC Shop: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மழையால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos


எனினும், அத்தியாவசிய சேவை துறைகளான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உள்ளாட்சி நிர்வாகத் துறைகள், பால் வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை, மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரத் துறை, காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசிப் பொருட்களுக்கான போக்குவரத்து, மாநகர போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரயில், MRTS, இரயில்வே, விமான நிலையம், விமான போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் பேரிடர் மீட்பு நிவாரண பணிகள் மேற்கொள்ளும் துறைகள் ஆகியவை வழக்கம் போல் இயங்கும்.

பிற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும். நாளை மிக அதிகனமழை எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு, சென்னையில் உள்ள தனியார் அலுவலகங்கள் மிகக் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டோ அல்லது தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படியோ அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு எடுத்து நடத்தி வரும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் கொட்டும் மழையிலும் மதுக்கடைகளை திறந்து வணிகம் செய்வது தான் திராவிட மாடல் சேவையா? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக  தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் பள்ளிகள், கல்லூரிகள், அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. டாஸ்மாக் பொதுத்துறை நிறுவனம் தான் என்றாலும், மதுக்கடைகள் திறந்திருக்கும் என்று டாஸ்மாக்  மதுக்கடைகள்  திறந்திருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

பள்ளிகள், அலுவலகங்களுக்கு செல்வதில் இடையூறுகள் ஏற்படும் என்பதால் தான் அவற்றுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது மதுக்கடைகளை மட்டும் திறந்து வைக்க வேண்டிய தேவை என்ன? அது என்ன உயிர்காக்கும் மருந்தா அல்லது மக்களால் தவிர்க்க முடியாத அத்தியாவசிய சேவையா?  மது குடிக்க வேண்டும் என்று மதுக்கடைகளுக்கு செல்வோருக்கு மழை வெள்ளத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாதா? கொட்டும் மழையிலும் மதுக்கடைகளை திறந்து வணிகம் செய்வது தான் திராவிட மாடல் சேவையா?

tasmac

மழை, வெள்ளத்தால்  சென்னையிலும்,  சுற்றுப்புற மாவட்டங்களிலும் ஆபத்துகள் அதிகரித்துள்ள நிலையில், மதுக்கடைகளை திறப்பதால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து, மழை ஓயும் வரை மதுக்கடைகளை அரசு மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

click me!