1.விண்ணப்பதாரர் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
2.அவர் ஆதிதிராவிடர் (SC) அல்லது பழங்குடியின (ST) சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், அல்லது கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர் ஆகியோரும் இதில் அடங்குவர்).
இதையும் படிங்க : FD Invest: பெரிய வங்கிகளை விட அதிக லாபம்! சூப்பரான வட்டி தரும் குட்டி வங்கிகள் என்னென்ன?
3.விண்ணப்பதாரர் ஏற்கனவே அரசு வழங்கிய இலவச வீட்டு மனைப் பட்டா (Free house site patta) வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.
4.வருமான வரம்பு ஏதுமில்லை. மேலும், இது ஒரு "பொருள் சார்" (in-kind) உதவித் திட்டமாகும். அதாவது, பயனாளிகளுக்குப் பணமாகக் கொடுக்கப்படாமல், அரசே நேரடியாக வீட்டை கட்டி ஒப்படைக்கிறது. பயனாளிகள் எவ்விதச் செலவும் செய்ய வேண்டியதில்லை.