Chennai Power Cut : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (09.06.2026) சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படவுள்ளது.
காலை 09:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். பராமரிப்புப் பணிகள் முன்னதாகவே நிறைவடைந்தால், மதியத்திற்கு முன்பே மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.
22
மின் தடை ஏற்படும் பகுதிகள்
கோவூர்: மூகாம்பிகை நகர், குன்றத்தூர் பிரதான சாலை, ராம் நகர், குமரன் நகர், பெரியபனிச்சேரி, தண்டலம் பிரதான சாலை, பாபு கார்டன், இரண்டாம்கட்டளை, சிக்கராயபுரம் மற்றும் கொள்ளச்சேரி.
காரம்பாக்கம்: வானகரம், பி.எச். சாலை, சிவபூதம், ராஜீவ் நகர், கந்தமாபுரம், வானகரம் சர்வீஸ் சாலை, செட்டியார் அகரம், ஐ.சி.எல்., நூம்பல், அக்னி ஃபேரி லேண்ட், மூர்த்தி நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், போரூர் கார்டன் (பேஸ் 1 மற்றும் 2), ராமசாமி நகர், ஆண்டாள் நகர், சேக்மணியம், மெட்ரோ நகர், மகரிஷி டீச்சர்ஸ் காலனி, சமயபுரம், காவேரி நகர், பாரதி சாலை, தர்மராஜா நகர், அருணாச்சலம் நகர், மோதி நகர் மற்றும் வெங்கடேஸ்வரா நகர்.
திருவேற்காடு: வேலப்பன்சாவடி, மாதர்வேடு, பெருமாள் கோயில் தெரு, பத்மாவதி நகர் மற்றும் கூட்டுறவு நகர்.
மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், இந்த மின்தடை அறிவிப்பைக் கருத்தில் கொண்டு தங்களின் அன்றாடப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.