Chennai Power Cut: மே 24ம் தேதி.. ஞாயிற்றுக்கிழமை அதுவுமா சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை!

Published : May 23, 2026, 07:00 AM IST

Chennai Power Cut: தமிழக முழுவதும் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் நாளை ஞாயிற்று கிழமை அதுவுமா எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்க்கலாம்.

PREV
15
அக்னி நட்சத்திரம் வெயில்

தமிழகத்தில் தற்போது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் 107 டிகிரி அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெயிலுக்கு பயந்து வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அதுமட்டுமல்ல புழுக்கம் அதிகமாக இருப்பதால் வீட்டில் எந்நேரமும் ஃபேன், ஏசி உள்ளிட்டவைகள் ஓடிக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக மின்தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

25
துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி

இந்நிலையில் தலைநகர் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.

35
சென்னையில் நாளை மின்தடை

இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான லிஸ்ட் வெளியிடப்படும். அதன்படி நாளை தினம் (24-05-2026) அதாவது ஞாயிற்றுக்கிழமை அதுவுமாக சென்னையில் முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

45
அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை

சிட்கோ தொழிற்பேட்டை, செக்டர் 3-இல் உள்ள 1வது குறுக்கு பிரதான சாலை, 1 மற்றும் 2வது லேன், 2 மற்றும் 3வது தெரு, பஜனை கோவில் தெரு, நல்ல கிணறு தெரு, கன்னியம்மன் கோவில் தெரு, குள்ளன் தெரு, பாடசாலை தெரு, கோரமண்டல் டவுன், சி.டி.எச். சாலை, மேனாம்பேடு சாலை, சிட்கோ தொழிற்பேட்டை 10 மற்றும் 11வது தெரு, சிட்கோ தொழிற்பேட்டை வடக்கு கட்டம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

55
முகப்பேர்

2வது பிரதான சாலை, ரெட்டிப்பாளையம் பிரதான சாலை, முகப்பேர் பிரதான சாலை, எம்.ஜி.ஆர் சாலையில் பின்புறம் உள்ள C19, C18, C15 மற்றும் C16 பகுதிகள், அம்பத்தூர் தொழிற்பேட்டை (தெற்கு பகுதி) உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories