TN govt employees salary : அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருப்பது அரசு ஊழியர்கள் தான், அந்த வகையில் அரசின் திட்டங்களை கடைநிலை வரை கொண்டு செல்வது அரசு ஊழியர்கள் தான். இந்த நிலையில் அரசு ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், சரண் விடுப்பு திட்டத்தை உடனடியாக அமல் படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.