2 லட்சம் ரூபாய் பரிசை தட்டி செல்ல வாய்ப்பு- தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

First Published | Oct 15, 2024, 9:43 AM IST

தமிழக அரசு இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்குகிறது. மாநில அளவில் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து சான்றிதழுடன் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

TAMILNADU WOMEN

தமிழக அரசின் திட்டங்கள்

தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி மாணவர்கள் முதல் முதியோர்கள் வரை நிதி உதவி திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம் திட்டம், புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் என்கிற திட்டமும் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் பணம் கிடைப்பது அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்தநிலையில் தற்போது உள்ள காலநிலையில் விரைவாக விவசாயம் மாறிவிட்டது. அதாவது ரெடிமேட் விவசாயம் நாடு முழுவதும் பரவிவிட்டது.

AGRI

செயற்கை விவசாயம்- விவசாய நிலம் பாதிப்பு

செயற்கையான உரங்கள், விதைகள், பூச்சிக்கொல்லிகள் மூலம் விவசாய செய்யப்படுகிறது. இதனால் நிலங்கள் மாசுப்படுவது மட்டுமில்லாமல், இயற்கையாக கிடைக்கும் காய்கறிகளில் உள்ள சத்துக்கள் செயற்கை முறையில் உருவாக்கப்படும் காய்கறிகளில் கிடைப்பதில்லை. இயற்கை விவசாயப் விளைபொருட்கள் என்ற பெயரில் கிடைக்கும் பலவும் போலியானவை  பரவிகிடக்கிறது. விவசாயம் செய்வதற்கு மண் வளம் என்பது மிகவும் அவசியம்.

உலகளவில் மண்ணை ஒரு ஜடப்பொருளாக பார்க்கின்றனர். ஆனால் அந்த மண்ணில் தான் கோடிக்கணக்கான நுண்ணுயிர்களால் தான் பயிர்கள் விளைகின்றன. எனவே இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் இயற்கை விவசாயத்தில் முற்றிலும் இயற்கை உரங்களே பயன்படுத்தப்படுகின்றன.

Tap to resize

FARMERS

இயற்கை விவசாயம்- தமிழக அரசு ஊக்கம்

மண்புழு உரம்., சாண எரு உரம், தொழு உரம், பசுந்தாள் உரம் மற்றும் பசுந்தழை உரம் ஆகிய உரங்கள் பயன்படுத்தப்படுகிறது. தமிழக அரசு சார்பாக இயற்கை விவசாயிகளுக்கு மானியமும், ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கை விவசாயம் செய்பவர்களா நீங்கள்? இது உங்களுக்கான விருது என தெரிவித்துள்ளது. அந்த வகையில்,  தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவில் வழங்கப்பட உள்ள விருதுக்கு தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AWARD PRIZE

விண்ணப்பிக்க அழைப்பு

இதன் படி மாநில அளவில் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து சான்றிதழுடன் ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது. முதல் பரிசாக 1,00,000 ரூபாயும்,  2வது பரிசாக  60,000 ரூபாயும், 3வது பரிசாக 40,000 ரூபாயும் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் கலந்து கொள்ள தகுதியுள்ள விவசாயிகள் இதற்கான விண்ணப்பப்படிவம் தோட்டக்கலைத்துறை இணையதளம்    www.tnhorticulture.tn.gov.in - இல் பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அவர்களின் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!