தமிழக அரசு சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. 2023-24ல் 10,000 புதிய குழுக்கள் உருவாக்கப்பட்டு ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் கழகம் மூலம் ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் சுய உதவிக் குழுவிற்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது, குறிப்பாக பெண்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகின்றன. சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி கடன், பொருளாதார கடன் மற்றும் வங்கிக் கடன்கள் வழங்கப்படுகின்றன. 2023-24 நிதியாண்டில் 10,000 புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, இதற்காக ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
ஜூன் மாதம் சென்னையில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழு தின விழாவில், 33,312 குழுக்களுக்கு ரூ.3,134.21 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டது. மேலும் சுயதொழில் தொடங்குவதற்கு அரசு கடன்களில் மானியங்களும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 5 லட்சம் கடனுக்கு ரூ.1.75 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.
24
மகளிர் சுய உதவிக்குழு கடன்கள்
மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருட்களை விற்பனை செய்ய, சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே மதி சந்தை வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் நடத்தப்படுகிறது. மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் 25 கிலோ வரை உடைய தங்கள் பொருட்களை 100 கி.மீ. தூரம் வரை அரசு பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்லவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு இதற்கு கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.
சுய உதவிக் குழுக்கள் மற்றும் தனிநபர்களுக்கு தொழில் தொடங்குவதற்கு நிதி உதவி, சுய உதவிக் குழுக்களுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. தமிழக அரசு மகளிர் மற்றும் ஆண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு குறைந்த வட்டியில் கடன், வட்டி மானியம், கடன் தள்ளுபடி மற்றும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது.
34
சுய உதவிக்குழுவிற்கு 15 லட்சம் ரூபாய் கடன்
இந்த நிலையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் குழுக்கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு சிறு தொழில் அல்லது வியாபாரம் தொடங்க உதவும் வகையில் ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்குகிறது.
சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள மகளிர் மற்றும் ஆடவர் குழுவாக சிறு தொழில் அல்லது வணிகம் செய்வதற்கு குழுக்கடன் வழங்கப்படுகிறது. சிறு தொழில், வணிகம் மற்றும் பிற பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் தொழில்கள் மேற்கொள்வதற்காக வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த திட்டத்தின் கீழ் கடன் தொகை ஒரு குழுவுக்கு அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை வழங்கப்படுகிறது. ஒரு உறுப்பினருக்கு அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த கடன் உதவி திட்டத்தில் வட்டி விகிதம் ஆண்டுக்கு 6% வட்டி எனவும் திரும்ப செலுத்தும் காலம் 2 1/2 ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடத்தித்தில் சேர
விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள். மாவட்ட / மத்திய / நகர கூட்டுறவு வங்கிகள் / கூட்டுறவு கடன் சங்கங்கள், ஆகிய இடங்களில் விண்ணப்பிக்க வேண்டும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவைப்படும் ஆவணங்கள்
சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ். ►குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம்
மேலும் விவரங்களுக்கு TABCEDCO இணையதளத்தைப் பார்க்கவும்: https://www.tabcedco.tn.gov.in