Published : Jun 27, 2025, 10:59 AM ISTUpdated : Jun 27, 2025, 11:29 AM IST
தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வில் 3,02,374 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 2,41,641 மாணவர்களுக்கு தரவரிசை எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 47,372 மாணவர்களுக்கு தரவரிசை வழங்கப்பட்டுள்ளது.
பொறியியல் கலந்தாய்விற்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை மதிப்பெண்கள் பட்டியலை உயர்கல்வி அமைச்சர் சென்னையில் இன்று காலை வெளியிட்டார். தரவரிசை மதிப்பெண் 200க்கு 200 மதிப்பெண்களை 144 மாணவர்கள் இந்த ஆண்டு பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 65 மாணவர்கள் மட்டுமே பெற்ற நிலையில், இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்து இருக்கிறது.
அந்த வகையில் தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு மொத்தம் பதிவு செய்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 3.02,374. அதில் பதிவுக்கட்டணம் செலுத்திய மாணாக்கர்களின் எண்ணிக்கை 2,50.298. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 40.645 கூடுதலாகும். இந்த ஆண்டு தரவரிசை எண் வழங்கப்பட்ட மாணாக்கர்களின் எண்ணிக்கை 2,41,641. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 41.773 கூடுதலாகும்.
24
7.5% இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள்
இந்த ஆண்டு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீடான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 51.004 மாணாக்கர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள்.
இதில் பள்ளிகல்வி துறையால் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 47,372 மாணாக்கர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 15,149 கூடுதலாகும். இந்த ஆண்டு விளையாட்டு பிரிவின் கீழ் 5,885 மாணாக்கர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். அவர்களின் விளையாட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு 2,446 மாணாக்கர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது.
34
தரவரிசைப்பட்டியல் சிறப்பு ஒதுக்கீடு யாருக்கு.?
இந்த கல்வியாண்டில் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுதாரர் பிரிவின் கீழ் 1,361 மாணாக்கர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் 473 மாணாக்கர்களுக்கும் தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. 200 க்கு 200 கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 144. அதில் தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்தின் கீழ் படித்த மாணாக்கர்கள் 139 மற்றும் மற்ற தேர்வு வாரியத்தின் கீழ் படித்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 05.
மாணவ, மாணவியர் தங்களது தரவரிசை எண்ணை மின்னஞ்சல் www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். மாணாக்கர்கள் விண்ணப்பித்திருந்து, தரவரிசை பட்டியலில் தங்களது பெயர் விடுபட்டு இருந்தாலோ அல்லது வேறு குறைகள் இருந்தாலோ. இன்று முதல் 5 நாட்களுக்குள் (02.07.2025-க்குள்) தங்கள் அருகாமையில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை சேவை மையத்தினை (TFC's) அணுகி தங்கள் குறைகளை பதிவு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீடான 7.5 சதவீதத்திற்கு கோராமல் விடுபட்ட மாணாக்கர்களும் தங்களுக்கு அருகாமையில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை சேவை மையத்திற்கு சென்று 02.07.2025-க்குள் தங்களது பெயரை இணைத்துக்கொள்ளலாம்.
மாணாக்கர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தில் செயல்பட்டு வரும் அழைப்பு மையத்தினை தொலை பேசி (1800-425-0110) வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.