தமிழக அரசு பெண்களின் கல்வி, பொருளாதார மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.அந்த வகையில் தற்போது இலவசமாக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழக அரசு மகளிர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களின் கல்வி, பொருளாதார மேம்பாடு, பாதுகாப்பு, மற்றும் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் திட்டங்களானது வடிவமைக்கப்பட்டுள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
புதுமைப் பெண் திட்டத்தினால் அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டமான விடியல் பயண திட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
25
தமிழக அரசின் கல்வி உதவித்தொகை திட்டம்
பணிபுரியும் மகளிர், உயர்கல்வி மாணவியர், மற்றும் திருநங்கையர் உள்ளிட்ட அனைத்து பெண்களும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம். மேலும் பெண்களுக்கு திருமண உதவித்திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பட்டதாரி பெண்களுக்கு 50ஆயிரம் ரூபாய் மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.
மற்ற பெண்களுக்கு 25ஆயிரம் ரூபாய் உதவித்தொகை மற்றும் தங்கமும் வழங்கப்படுகிறது. . இலவச தையல் இயந்திரத் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் பெண்களுக்கு இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சியும் வழங்கி வருகிறது. “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் சாலைப் போக்குவரத்து நிறுவனம் மூலம் இலவச பயிற்சியானது வழங்கப்படுகிறது.
35
பெண்களுக்கான ஓட்டுநர்
இந்த திட்டத்தில் இணைய தமிழக அரசு பெண்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பெண்களுக்கான இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சியானது தமிழக அரசு சார்பில் அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சி "நான் முதல்வன் திட்டத்தின் கீழ்" தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சாலைப் போக்குவரத்து நிறுவனத்தின் (Institute of Road Transport) மூலம் இலவசமாக அளிக்கப்படவுள்ளது.