மைதா, ரவை,கோதுமை, சீரகம், மல்லி
எனவே தமிழ் நாட்டில் சுமார் 7 கோடி பேர்களை உள்ளடக்கிய 2.25 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் கடைகளே ஆதாரமாக இருக்கின்றன. இதனைக் கணக்கில் கொண்டு தீபாவளியை எதிர்கொள்வதற்கும் ரேசன் கடைகள் வழியாக அனைத்துப் பகுதி மக்களுக்கும் தேவையான பொருட்களை வழங்குவது பொருத்தமாக இருக்கும்.
எனவே அரிசி, சர்க்கரை, மைதா, கடலை மாவு, பாமாயில், கோதுமை, மண்ணெண்ணெய், பருப்பு வகைகள், ரவை, மல்லி, மிளகாய் வத்தல், சீரகம், மிளகு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளில் வழங்குவதன் மூலம் 7 கோடி மக்கள் பயன் அடைய முடியும். எனவே ஏழை எளிய மக்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் அத்யாவசிய உணவுப் பொருட்களை தீபாவளி தொகுப்பாக வழங்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துவதாக அந்த தீர்மானத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.