தமிழகத்தில் வேலை வாய்ப்பு
ஆண்டு தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடி வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு என அலைந்து திரிந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசு சார்பாக வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பிற்கான ஏற்பாடு செய்து வருகிறது. குறிப்பாக மத்திய அரசு மற்றும் மாநில அரசு பணிகளுக்கு பணியாளர்கள் தேர்வு செய்வதற்காக தேர்வுகள் நடத்தப்படும்.
இந்த தேர்வுகளில் இளைஞர்களை தயார்படுத்தும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது. மேலும் சொந்த தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளவர்களுக்கு டிஜிட்டர் பிசினஸ், பேக்கரி தொழில், வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி செய்வது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இலவசமாக வழங்கி கடனுதவிக்கான ஏற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் தனியார் துறை வேலைவாய்ப்பிற்காக சிறப்பு முகாமையும் நடத்தி வருகிறது.
சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் அக்டோபர் 5ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வே.வ,வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி இந்த வேலை வாய்ப்பு முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளது. குறிப்பாக 10,000 த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
இலவச பயிற்சி
இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பம் தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதே போல அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல்கள் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம் -கல்வித்தகுதிகள்
8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ டிப்ளமோ நர்சிங் பார்மஸி, பொறியியல்
வயது வரம்பு
18 வயது முதல் 40 வயது வரை
வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள எந்த விதமான கட்டணும் இல்லையெனவும் அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் வேலைவாய்ப்பு குறித்து அறிந்து @ www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
job fair
வேலைவாய்ப்பு முகாம்
இதேபோல திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் 05,10,2024 சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மன்னை இராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரி, மன்னார்குடி வளாகத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் சிறப்பு அம்சமாக 100 க்கும் மேற்பட்ட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முகாமில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் வேலை
இந்த முகாமில் அயல்நாட்டில் வேலைவாய்ப்புப் பெறப் பதிவு வழிகாட்டப்படும் எனவும், TNSDC/DDU-GKY - ໙໙ மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பணிவாய்ப்புப் பெற வழிகாட்டுதல்கள் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதிகள்
8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ டிப்ளமோ நர்சிங் பார்மஸி, பொறியியல்
வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள எந்த வித கட்டணும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் திருவாரூர். 04366-224 226 தொடர்பு கொள்ளலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.