ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி.?
தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலுள்ள இ சேவை மையங்களில் https://www.tneseval.tn.gov.in என்ற இணையதளத்தில் வாயிலாக உரிய ஆவணங்களோடு பட்டாசு கடைக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தற்காலிக பட்டாசு உரிமம் பெற பிற மாவட்டங்களில் உள்ளது போல் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கும் வழிமுறை சென்னை காவல் துறையின் மண்டலங்களான கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு, ஆவடி மற்றும் தாம்பரம் மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
எனவே பட்டாசு கடை அமைப்பதற்கு அனுமதி கோரிய விண்ணப்பங்களை அக்டோபர் 19ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.