வீஷேச நாட்களில் சிறப்பு பேருந்து
தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ், புத்தாண்டு என முக்கிய விஷேச நாட்கள் மட்டுமின்றி தொடர் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்கும், சுற்றுலா செல்வதற்கும் தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகின்றனர். இது மட்டுமில்லாமல் வேளாங்கண்ணி கோயில் திருவிழா, தஞ்சை கோயில் திருவிழா, நாகூர் தர்ஹா சந்தனக்கூடு போன்ற நாட்களிலும் சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பேருந்து இயக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள தசரா திருவிழாவிற்கான சிறப்பு பேருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.