Driving Licence : லைசென்ஸ் எடுக்கப் போறீங்களா? செப்.15 முதல் வரப்போகும் இந்த சூப்பர் மாற்றம் தெரியுமா?

Published : Sep 02, 2026, 02:54 PM IST

Driving Licence : செப்.15 முதல் தமிழகத்தில் டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் RC சேவைகள் அறிமுகமாகின்றன. ஓட்டுனர் தேர்வு பாஸ் செய்த அன்றே டிஜிட்டல் லைசன்ஸ், QR Code மூலம் சரிபார்ப்பு உள்ளிட்ட புதிய வசதிகள் கிடைக்கும்.

PREV
17
செப்.15 முதல் என்ன மாற்றம்?

தமிழகத்தில் வாகன ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கான சில முக்கிய போக்குவரத்து சேவைகள் வரும் செப்டம்பர் 15, 2026 முதல் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட உள்ளன. இதை முதல்வர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவித்துள்ளார்.

இதன்படி டிஜிட்டல் டிரைவிங் லைசன்ஸ் மற்றும் டிஜிட்டல் ரெஜிஸ்டிரேஷன் செர்டிஃபிகேட் (RC Card) ஆகியவற்றை இணையவழியில் பெறுவதற்கான வசதி மாநிலம் முழுவதும் அறிமுகமாகிறது. குறிப்பாக, புதிய வாகனம் பதிவு செய்யும் உரிமையாளர்களுக்கு டிஜிட்டல் ஆர்சி வழங்கப்படும்; ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் டிரைவிங் லைசன்ஸ் வழங்கப்படும்.

இதையும் படிங்க : Kitchen : கேஸ் அடுப்புக்கு பக்கத்தில் இந்த 7 பொருட்களை வைக்காதீங்க! சின்ன தவறு பெரிய பிரச்சினையாகலாம்!

27
ஓட்டுனர் தேர்வு பாஸ் செய்த அன்றே டிஜிட்டல் லைசன்ஸ்

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே மின்னணு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு உரிமம் கைக்கு வரும் வரை பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை குறையும். இந்த மின்னணு ஓட்டுநர் உரிமம் வழங்கும் வசதி செப்டம்பர் 15 முதல் மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வருகிறது.

இதையும் படிங்க : Sadayaga Yoga : ஏழரை சனியிலிருந்து தப்பி கோடிகளைக் குவிக்கப் போகும் 2 ராசிகள்! சடயாக யோகத்தால் இனி டாப் கிளாஸ் வாழ்க்கை!

37
புதுசா வண்டி வாங்குறீங்களா? பதிவுச் சான்றிதழும் இணையத்தில்!

புதிய வாகனம் பதிவு செய்யப்பட்ட பிறகு, அதற்கான மின்னணு வாகனப் பதிவுச் சான்றிதழை இணையம் வழியாகவே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதனால், பதிவு அட்டை அஞ்சலில் வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் குறையும். புதிய வாகனம் வாங்குபவர்களுக்கு வாகனப் பதிவு தொடர்பான ஆவணத்தை விரைவாகப் பெற்றுக்கொள்ள இந்த முறை உதவும்.

இதையும் படிங்க : Silver Jewellery : கறுத்துப்போன வெள்ளி நகைகளை 5 நிமிஷத்துல பளபளக்க வைக்க சூப்பர் டிப்ஸ்!

47
ஆவணத்தில் இருக்கும் கியூ.ஆர் குறியீடு எதற்கு?

மின்னணு ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழில் கியூ.ஆர் குறியீடு இடம்பெறும். அரசு அலுவலகங்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ அமைப்புகள் அந்தக் குறியீட்டை வருடி, ஆவணத்தின் விவரங்களை மின்னணு முறையில் சரிபார்க்க முடியும்.

இதன் மூலம் ஆவணம் உண்மையானதா என்பதை விரைவாகச் சரிபார்க்கும் வசதி கிடைக்கும். மேலும், போலி ஆவணங்களைத் தடுப்பதற்கும் இந்த நடைமுறை உதவும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : Thick Curd : கெட்டித் தயிர் வேணுமா? இந்த ஒரு இலையை போடுங்க! பாட்டி காலத்து டெக்னிக்!

57
லைசென்ஸ் அல்லது ஆர்.சி. தொலைந்தால் இனி டென்ஷன் வேண்டாம்!

ஓட்டுநர் உரிமம் அல்லது வாகனப் பதிவுச் சான்றிதழ் தொலைந்துவிட்டால், அதை மீண்டும் பெறுவதற்காக அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். புதிய மின்னணு முறையில், ஆவணம் தொலைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ மீண்டும் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். தேவையெனில் அதை அச்சிட்டும் வைத்துக்கொள்ளலாம். இதனால் ஒரு ஆவணம் தொலைந்துவிட்டதற்காக புதிதாக முழு நடைமுறையையும் மேற்கொள்ள வேண்டிய சிரமம் குறையும்.

இதையும் படிங்க : Numerology : இந்த தேதியில் பிறந்தவர்கள் 40 வயதுக்கு பின் கோடீஸ்வரர் ஆவது உறுதி! உங்க பிறந்த தேதி இருக்கா?

67
இனி எந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாமா?

“எங்கிருந்தும் பதிவு / உரிமம் பெறும் வசதி” என்ற முறையில், போக்குவரத்துத் துறை சார்ந்த சேவைகளை மக்கள் தங்களுக்கு வசதியான வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் பெறும் நடைமுறை படிப்படியாக கொண்டு வரப்பட உள்ளது.

ஓட்டுநர் உரிமம் பெறுதல், வாகனப் பதிவு, வாகனப் பதிவைப் புதுப்பித்தல் உள்ளிட்ட போக்குவரத்துத் துறை சேவைகளுக்கு இந்த வசதி படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு : இந்த வசதி அனைத்துச் சேவைகளுக்கும் செப்டம்பர் 15 அன்றே முழுமையாக நடைமுறைக்கு வரும் என்று கூறப்படவில்லை. இது படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளது.

இதையும் படிங்க : Washing Machine : வாஷிங் மெஷின்ல இப்படி துணியைப் போடுங்க, அழுக்கு சுத்தமா இருக்காது!

77
ஏற்கெனவே மின்னணு லைசென்ஸ் இருக்கே... அப்போ இப்போது என்ன புதுசு?

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவில் ஏற்கெனவே டிஜிலாக்கர் மற்றும் வாகன சேவை செயலி போன்ற மத்திய அரசின் தளங்கள் மூலம் மின்னணு ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழைப் பயன்படுத்தும் வசதி உள்ளது. மின்னணு ஆவணங்களை கியூ.ஆர் குறியீடு மூலம் சரிபார்க்கும் வசதியும் ஏற்கெனவே உள்ளது.

எனவே, “இந்தியாவிலேயே முதல் முறையாக மின்னணு ஓட்டுநர் உரிமம் வருகிறது” என்று இதைப் புரிந்துகொள்ளக்கூடாது.

தமிழகத்தில் இப்போது அறிவிக்கப்பட்டிருப்பது, மாநிலம் முழுவதும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழை மின்னணு முறையில் வழங்குவதற்கான புதிய சேவை அமைப்பு மற்றும் அதனுடன் இணைந்த போக்குவரத்துத் துறை சீர்திருத்தங்கள்.

இதையும் படிங்க : Free House : இலவச வீடு வழங்கும் தமிழக அரசு! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Read more Photos on
click me!

Recommended Stories