தீபாவளி மறுநாள் விடுமுறை..! தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மக்கள் குஷி!

Published : Oct 17, 2025, 09:47 PM IST

தீபாவளி மறுநாள் பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

PREV
12
தீபாவளி மறுநாள் விடுமுறை

தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளிக்கு மறுநாள் 22ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், தீபாவளிக்கு மறுநாள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

22
தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''இந்த ஆண்டு 20.10.2025 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள். அரசுஅலுவலர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு 21.10.2025 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும். அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 25.10.2025 அன்று பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories