கடந்த 2023-24 நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 15 லட்சத்து 71 ஆயிரத்து 368 கோடியாக இருந்த நிலையில், இப்போது இது 9.69% அதிகரித்து பெரும் உச்சத்தை கண்டுள்ளது. கடந்த மாதம் தமிழ்நாடு அரசு வெளியிட்ட முதல் பொருளாதார ஆய்வறிக்கையில், தமிழ்நாட்டின் பொருளாதாரம் 8 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டு இருந்த நிலையில், அதை விட கூடுதலாக 9.69% வளர்ச்சியை பெற்று தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.
சேவைகள் துறை அதிகப்பட்சமாக 12.7% வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் மனை வணிகம் 13.6%, தகவல் தொடர்பு, ஒலிபரப்பு 13%, வர்த்தகம் பழுது நீக்கல், தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் 11.7%, உற்பத்தி 8%, கட்டுமானம் 10.6% வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. அதே வேளையில் பயிர்த் தொழில் -5.93%, கால்நடை வளர்ப்பு 3.84% என குறைவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.