டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 4 தேர்வர்களுக்கு குட் நியூஸ்! தமிழக அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 & 4 தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் ஏப்ரல் 9 முதல் பயிற்சி ஆரம்பம்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 & 4 தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் ஏப்ரல் 9 முதல் பயிற்சி ஆரம்பம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்
தனியார் துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் கொட்டி கிடந்தாலும் எப்படியாவது அரசு பணியில் சேர்ந்தவிட வேண்டும் என பல லட்சம் இளைஞர்கள் இரவு பகலாக தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கு அரசு பணி வழங்கப்படுகிறது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு
இந்நிலையில் தனியார் பயிற்சி நிறுவனங்களில் பல ஆயிரங்கள் செலவு செய்து தேர்விற்கு படிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏழை எளிய இளைஞர்களால் தேர்வில் வெற்றி பெற முடியாத நிலையானது உருவாகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் குரூப் 1 மற்றும் குரூப் 4 போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்படுள்ளது.
இலவச பயிற்சி வகுப்பு
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 4 போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்திட அறிவுரை பெறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே! எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பு வந்தாச்சு!
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 4
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் ஏப்ரல் 01ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள 70-காலிப்பணியிடங்களுக்கும், இம்மாதத்தில் அறிவிக்கப்படவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஏப்ரல் 09ம் தேதி முதல் காலை 10.30 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் துவக்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படுவதுடன் இலவச மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
விண்ணப்பிக்க அழைப்பு
கடந்த ஆண்டு இவ்வலுவலகம் வாயிலாக நடைபெற்ற கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்கள் தற்போது பல்வேறு அரசு துறைகளில் பணி நியமனம் பெற்றுள்ளனர். மேற்காணும் இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 6381552624, 9626456509 என்ற கைபேசி எண்களை தொடர்பு கொண்டு விவரம் அறிந்து கொள்ளலாம். மேற்காணும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அடையாள அட்டை நகலுடன் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அலுவலக நாட்களில் நேரில் வருகை புரிந்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.