நீட் தேர்வை ஒழிக்கலனா தற்கொலைகள் தடுக்க முடியாது! மாணவர்களைக் காக்க அரசு என்ன செய்யப் போகிறது? ராமதாஸ்!

Published : Apr 05, 2025, 12:34 PM ISTUpdated : Apr 05, 2025, 12:39 PM IST

 நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதை அறிவிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

PREV
15
நீட் தேர்வை ஒழிக்கலனா தற்கொலைகள் தடுக்க முடியாது! மாணவர்களைக் காக்க அரசு என்ன செய்யப் போகிறது? ராமதாஸ்!
NEET Exam

 நீட் தேர்வு அச்சம்

நீட் தேர்வுக்காக ஏற்கனவே நடத்தப்பட்ட சட்டப் போராட்டங்களும்,  சட்டமியற்றும் முயற்சிகளும் தோல்வியடைந்து விட்ட நிலையில், அடுத்து தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகில் உள்ள புதுப்பாக்கத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவியான சக்தி புகழ்வாணி நீட் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்ற அச்சத்தால் வீட்டில் தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக விழுங்கி  தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவி  சக்தி புகழ்வாணியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

25
College Student Suicide

தாங்க முடியாத மன உளைச்சலால் தற்கொலை

மாணவி சக்தி புகழ்வாணி  அண்மையில் தான் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதி முடித்து விட்டு, முடிவுக்காக காத்திருந்தார். அத்துடன் நீட் தேர்வுக்காகவும் தனிப்பயிற்சி பெற்று வந்தார்.  மே மாதம் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான நாள்கள் நெருங்க, நெருங்க  அதில் தம்மால் போதிய மதிப்பெண்களை  எடுக்க முடியுமா? என்ற அச்சமும், பதட்டமும் சக்தி புகழ்வாணிக்கு அதிகரித்தது.  ஒரு கட்டத்தில் தாங்க முடியாத மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: மாணவர்களை கொல்லும் நீட் தேர்வுக்கு முடிவு கட்டணும்! இனியும் தாமதம் செய்யக்கூடாது! அலறும் அன்புமணி!

35
Four students commit suicide

ஒரு மாதத்தில் 4  மாணவிகள் தற்கொலை 

கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி திண்டிவனம் அருகே இந்துமதி,  அதைத் தொடர்ந்து  மார்ச் 28-ஆம் தேதி கிளாம்பாக்கம் தர்ஷினி, நேற்று முன்நாள் வியாழக்கிழமை எடப்பாடி பெரியமுத்தியம்பட்டி சத்யா,  நேற்று புதுப்பாக்கம் சக்தி புகழ்வாணி என  ஒரு மாதத்தில் 4  மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மாணவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும்  தடுக்க முடியாது.

இதையும் படிங்க:  நீட் தேர்வுக்கு முடிவுக்கட்ட ஸ்டாலின் திட்டம்.! சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் - தேதி குறித்த தமிழக அரசு

45
mk stalin

மாணவர்கொல்லி நீட் தேர்வு

அதற்காக தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பது தான் தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் வினா ஆகும். தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக,  புதிய சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதுடன் கடமையை முடித்துக் கொண்டது.  மாணவர்கொல்லி நீட் தேர்வை திணிப்பதில் தீவிரமாக இருக்கும் மத்திய அரசோ, அந்த சட்டத்தை ஏற்க மறுத்து விட்டது. அதனால் நீட் அச்சுறுத்தல் நிரந்தரமாகி விட்டது.

55
Ramadoss

தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?

நீட் தேர்வுக்காக ஏற்கனவே நடத்தப்பட்ட சட்டப் போராட்டங்களும்,  சட்டமியற்றும் முயற்சிகளும் தோல்வியடைந்து விட்ட நிலையில், அடுத்து தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கான நடவடிக்கைகள் எந்த வகையிலும் பயனளிக்காது.  நீட் தேர்வை ரத்து செய்யவும்,  மாணவர்கள் தற்கொலையைத் தடுக்கவும் என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதை பொதுமக்கள் மத்தியில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories